Chennai Rains: சென்னைவாசிகளே! கொட்டும் மழையால் மின்தடையா? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க
சென்னைக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் மின்வாரியம் சார்பாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னையில் நேற்று முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மின்வாரிய தொடர்பு அலுவலர்கள் ☎️#சென்னை நகரின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்பு. மின்சாரம், பாதுகாப்பு மற்றும் சேவைகளை நிறைவேற்றிட ஒன்றிணைந்து செயல் படுவோம்! #TANGEDCO #TNPDCLMonsoon#TNPDCLNodal officers #TeamCoordination#TNEB | #NorthEastMonsoon | #ChennaiRains pic.twitter.com/JPkT652C9C
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) October 15, 2024
சிறப்பு உதவி எண்கள்:
கனமழை காரணமாக சென்னையில் மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கும், மின் விநியோகம் சீராக இருப்பதற்கும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதுடன் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் - ஜெகதீஷ்குமார் - 94458 50889
மணலி - ரங்கராஜ் - 94458 50871
மாதவரம் - சௌந்தர்ராஜன் -94458 50344
தண்டையார்பேட்டை- சுஜா - 94458 50900
ராயபுரம் - ப்ரேம்குமார் - 94458 50686
திரு.வி.க. நகர் - ஜெயச்சந்திரன் - 94458 50909
அம்பத்தூர் - மலைவேந்தன் - 94458 50311
அண்ணாநகர் - அன்பரசு - 94458 50286
தேனாம்பேட்டை - உதயகுமார் - 94458 50717
கோடம்பாக்கம் - வெங்கடேசன் - 94458 50727
வளசரவாக்கம் - வேல்முருகன் -94458 50202
ஆலந்தூர் - நரேஷ்பாபு - 94458 50179
அடையாறு - ராமு - 94458 50555
பெருங்குடி - பாலசுப்ரமணியன் – 950065 9827
சோழிங்கநல்லூர் - ப்ரேம்குமார் - 94458 50164
சென்னை மக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் மின்தடை அல்லது மின்சார கோளாறு ஏற்பட்டாலோ, மின்கம்பிகள் அறுந்து தொங்குவது குறித்து அறிந்தாலோ உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.