Happy Streets : சென்னை ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..
சென்னை அண்ணாநகரில் மக்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபெற்று வரும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அசத்தினார்.
சென்னை மாநகராட்சி சார்பில் அடிக்கடி பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகரில் இன்று காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் வருகை புரிந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டார். தினசரி நடைபயணம் மேற்கொள்ளும் பழக்கம் உடைய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியில் டீ சர்ட், டிராக் பேண்டுடன் பங்கேற்று அசத்தினார்.
“Happy Streets” நிகழ்ச்சியில் சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டி, பூப்பந்து விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!https://t.co/wupaoCQKa2 | @mkstalin #Chennai #DMK #MKStalin #HappyStreets pic.twitter.com/m15UznYDVq
— ABP Nadu (@abpnadu) August 21, 2022
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு பங்கேற்ற இளைஞர்களுடன் இணைந்து டேபிள் டென்னிஸ் ஆடினார். மேலும், செட்டில்கார்க் ஆடியும், கூடைப்பந்து ஆடியும் அசத்தினார். இது மட்டுமின்றி, சைக்கிள் ஓட்டியும் உடல் ஆரோக்கியத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்கேட்டிங் செய்து அசத்திய சிறுவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுக்களுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், போக்குவரத்து மிகுந்த சாலையில் மக்கள் விளையாடி வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
மேலும் படிக்க : காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்யத் திட்டம்: சிக்கிய மனைவிக்காக போலீசிடம் கெஞ்சிய கணவர்
மேலும் படிக்க : Crime : 100 செயலிகள்....நிர்வாண புகைப்படங்களை காட்டி மிரட்டிய கும்பல்...சிக்குமா 500 கோடி ரூபாய்? பின்னணியில் சீனர்கள்