மேலும் அறிய
Advertisement
சென்னையில் 2 சோழர் கால சிலைகள் மீட்பு - விசாரணையில் திடுக்கிடும் தகவல்
கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து 2 சோழர் கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் வரலாற்று அருங்காட்சியகத்தில், ( தட்சிண சித்ரா ) இரண்டு சோழர் கால சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினருக்கு, இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால உலோக சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சிலை கடத்தல், தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிலைகள் குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான குழுவிற்கு உத்தரவிட்டார். அதன்படி டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான குழு கடந்த 6ம் தேதி தட்சிண சித்ரா வரலாற்று அருங்காட்சியகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காட்சிப்படுத்தப்பட்ட சிலைகளில் வீணாதரர் சிலை, ரிஷப்தார் சிலை என 2 சிலைகள் மிகவும் பழமை வாய்ந்த சிலைகள் என தெரியவந்தது.
உடனே அருங்காட்சியகத்தின் நிர்வாகிகளிடம் இந்த இரண்டு சிலைகள் குறித்த ஆவணங்களை கேட்ட போது, 'இந்த சிலைகளை தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சர்வமான்ய தெருவை சேர்ந்த மாசிலாமணி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, எங்கள் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்' என தெரிவித்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மாசிலாமணியை தொடர்பு கொண்டு சிலைகள் குறித்து விசாரணை நடத்திய போது, முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும், நன்கொடையாக வழங்கிய சிலைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்றும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அருங்காட்சியகத்தின் மேலாளர் அசோக்குமாரிடம் அதிகாரிகள் சட்ட விரோதமாக பழங்கால சிலைகள் வைத்திருப்பதாக கூறியதை தொடர்ந்து, அவர் 2 சிலைகளையும் திரும்ப சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும், திருடப்பட்ட சிலைகளை நன்கொடையாக வழங்கிய மாசிலாமணி மீதும் அருங்காட்சிய மேலாளர் அசோக்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மாசிலாமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சிலைகள் சோழர் காலத்தை சேர்ந்த பழமையானது என்று தொல்லியல் துறை நிபுணர்கள் தெரிவித்தனர். பிரபலமான அருங்காட்சியகத்தில் இரண்டு சோழர்கள் சிலை மீட்க பட்டு இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion