சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 2, 635 கட்டடங்களின் பணிகளை நிறுத்த மாநகராட்சி அதிரடி உத்தரவு
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 2, 635 கட்டடங்களின் பணிகளை நிறுத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரத்து 635 கட்டடங்களின் பணிகளை நிறுத்த மாநகராட்சி குறிப்பாணை வெளியிட்டுள்ளது.
மேலும் விதிமீறல்களை சரிசெய்யத 2 ஆயிரத்து 403 கட்டடங்களை சீல் வைக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 39 கட்டடங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வரை நடத்தப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.22,22,810 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் பகுதியில் கட்டுமான கழிவுகளை கொட்டியதற்காக ரூ. 2,02,970 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும்
— Greater Chennai Corporation (@chennaicorp) August 21, 2022
ரூ.22,22,810 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ChennaiCorporation#ThooimaiChennai#SeermiguChennai#NammaChennaiSingaraChennai pic.twitter.com/8TYnU9soPi
View this post on Instagram
View this post on Instagram