20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆணையர் ககந்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்

FOLLOW US: 

கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுபாதிப்பு ஏற்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவத்தொடங்கிது. தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைபின்பற்றி தமிழக அரசால் பொதுமக்களுக்குதடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் விலையிலாமல் வழங்கி வருகிறது.

20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய சென்னை மாநகராட்சி

அதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பின்னர் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள நபர்களுக்கும் அதனை தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள அனைவருக்கும்  விலையில்லாமல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இத்துடன் மருத்துவ பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணிய்ல் ஈடுபட்ட பணியாளர்கள் என முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை அமைத்து அவர்களுக்கு விரைந்து தடுப்பூசி வழங்கும் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது. மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் பதிவு செய்யும் நபர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு மிக அருகாமையில் அல்லது அவர்களது இல்லத்திற்கு சென்று செலுத்தப்பட்டது. இதுநாள் வரை 2,464 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 195 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 2,659 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று செலுத்தப்பட்டுள்ளது. 

20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய சென்னை மாநகராட்சி

18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கலாம் என மத்திய மாநில அரசுகள் அறிவித்த பிறகு தற்போதைய தடுப்பூசி இருப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் நாள்தோறும் செய்தித்தாள்கள் விநியோகம் செய்பவர்கள் பால் விநியோகம் செய்பவர்கள் தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளின் பணியாளர்கள், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மின் துறை பணியாளர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், அனைத்து அரசு துறை பணியாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், அத்தியாவசிய பணிகளுக்கான தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாநில போக்குவரத்து ஊழியர்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் மாநில பிற துறைகளின் தொழிலாளர்கள் கொரோனா பாதிப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சேவை புரியும் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய சென்னை மாநகராட்சி

மேற்குறிப்பிட்ட தடுப்பூசி முகாம்களின் வாயிலாக பொருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை 15 லட்சத்து 34 ஆயிரத்து 439 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 4 லட்சத்து 88 ஆயிரத்து 706 நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த மே 31ஆம் தேதி வரை 20 லட்சத்து 23 ஆயிரத்து 145 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Tags: covid vaccine chennai corona TN Corona 9vaccine chennai vaccine

தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

திருவண்ணாமலை : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

Sivashankar Baba | சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது..!

Sivashankar Baba | சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது..!

வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்குப் பரவியது மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்று..!

வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்குப் பரவியது மாறுபட்ட கொரோனா  வைரஸ் தொற்று..!

மதனின் வங்கி கணக்கு முடக்கம் - ரூ.4 கோடி இருந்தது கண்டுபிடிப்பு

மதனின் வங்கி கணக்கு முடக்கம் - ரூ.4 கோடி இருந்தது கண்டுபிடிப்பு

பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

டாப் நியூஸ்

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!