சென்னையில் அதிகரிக்கும் கொரோனா..! இனிமேல் மாஸ்க் கட்டாயம்...! மாநகராட்சி அதிரடி உத்தரவு..!
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் மேல் அதிகமாக பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
#TamilNadu | #COVID19 | 03 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 3, 2022
Today/Total - 2,672 / 34,82,775
Active Cases - 14,504
Discharged Today/Total - 1,487 / 34,30,245
Death Today/Total - 0 / 38,026
Samples Tested Today/Total - 33,289 / 6,72,46,684@
Test Positivity Rate (TPR) - 8.0%#TNCoronaUpdate #TN pic.twitter.com/TJIbu5w0f4
கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக, வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுசுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக்கடைகள் போன்ற வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்.
TNCorona District Wise Data 03 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 3, 2022
Ariyalur 9
Chengalpattu 373
Chennai 1,072
Coimbatore 145
Cuddalore 14
Dharmapuri 6
Dindigul 8
Erode 31
Kallakurichi 12
Kancheepuram 81
Kanyakumari 83
Karur6
Krishnagiri 20
Madurai 54
Mayiladuthurai 4
Nagapattinam 5
Namakkal 25
Nilgiris 11
ஒவ்வொரு தனிநபரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வெளியில் செல்லும்போது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்