மேலும் அறிய
Advertisement
100 அடி கொடி கம்பம்... அதிமுக தொண்டர் உயிரிழப்பு - பிரமுகர் கைது
100 அடி அதிமுக கொடி கம்பம் விழுந்து அதிமுக தொண்டர் பலி
தமிழக அரசியலை பொறுத்தவரை, கட்சியை மக்கள் நினைவில், வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், பல இடங்களில் கொடி கம்பம் நடுவது வழக்கமாக உள்ளது. புதியதாக ஒரு ஊருக்கு செல்கிறோம் என்றால், அந்த ஊரில் எந்த கட்சி கொடி இருக்கிறதோ, அதை வைத்தே இந்த ஊர் மக்களின் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம், அந்தளவிற்கு கட்சி கொடிக்கம்பங்கள் இன்றியமையதாக உள்ளது. 80 அடி 100 அடி உயரத்திற்கு கூட கொடிக்கம்பங்கள் உள்ளன, சமூக ஆர்வலர்கள் பலரும் இதுபோன்று கொடிக்கம்பங்கள் இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்தும் வருகின்றனர். விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் , ஒரு புறம் இருந்தாலும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து பல அடி உயர கொடிக்கம்பங்கள் வைப்பது தொடர்படியாக இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 100 அடி உயரமுள்ள அதிமுக கொடிக்கம்பம் உள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையால் கொடியேற்றப்பட்ட கொடி கம்பம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக உள்ள எடப்பாடி பழனிசாமி கையால் திறந்து வைக்கப்பட்ட கொடி கம்பம் என்பதால், அந்தப் பகுதியை சேர்ந்த அதிமுகவினர் இந்த கொடிக்கம்பத்தை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் மாண்டஸ் புயல் காரணமாக அதிமுக கொடி கிழிந்து, சேதம் அடைந்தது. இந்த கொடியை மாற்றுவதற்காக கம்பத்தில் உள்ள ரோப் கயிறு இழுத்து உள்ளனர். அப்போதும் ரோப்பு வராததால் கொடி கம்பத்தை, இறக்கி புதிய ரோப் மற்றும் கொடியை மாற்றி ஏற்றுவதற்காக , நேற்று மாலை அதிமுகவை சேர்ந்தவர்கள் கிரேன் மூலம் கொடி கம்பத்தை இறக்கி கொடி கம்பத்தின் ரோப்பை சரி செய்து, மீண்டும் கொடிக்கம்பத்தை தூக்கி நிறுத்தும் பொழுது கம்பம் தவறி விழுந்து, கீழே நின்று கொண்டிருந்த அதிமுக தொண்டர் செல்லப்பன் மீது விழுந்துள்ளது. இதில் பலத்த அடைந்த செல்லப்பனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிழலில் இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சரவணன் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரெய்ன் ஓட்டுநர் கோபிநாத்தையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion