மேலும் அறிய

காஞ்சிபுரம்: 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே காட்டுபுத்தூர் கிராமத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால வகையை சார்ந்த ஈம சின்னமான கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர்  அருகே உள்ளது காட்டுப்புத்தூர் கிராமம் இக்கிராமத்தில்  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால வகையை சார்ந்த ஈம சின்னமான கல்திட்டை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்திட்டைகள் என்பவை பெருங்கற்கால பண்பாட்டை சார்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் காட்டுபுத்தார் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டபொழுது  கொல்லைமேட்டுப்பகுதியில் புதர்களுக்கிடையே இதனை கண்டுபிடித்துள்ளார். இதேபோல் இந்த இடத்தின் அருகே உள்ள எடமச்சி என்றும் இடத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட கல்திட்டைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

காஞ்சிபுரம்: 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு..!
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது, கல்திட்டைகள் என்பவை பெருங்கற்கால பண்பாட்டை சார்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும் இது பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும் அவற்றின் மீது சமநிலையில் தட்டையான ஒரு பலகைபோன்ற ஒரு கல்லையும் வைத்திருக்கும் ஓர் அமைப்பாகும்.

காஞ்சிபுரம்: 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு..!
பெருங்கற்கால மனிதர்களின் சுவடுகள் பெரும்பாலும் மலைகள் ஒட்டிய பகுதிகளிலும் மலைச்சரிவுகளிலுமே அதிகமாக காணப்படுகின்றன அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் வேட்டையின்போதோ வயது மூப்பின் காரணமாகவோ நோய்வாய்ப்பட்டோ  இறக்க நேரிட்டால் இறந்தவர்களின் உடலை புதைத்து அவ்விடத்தில் அவர் நினைவாகவும்  அடையாளத்திற்க்காகவும் , காட்டு விலங்குகள் உடலை சிதைக்காமல் இருப்பதற்காகவும் பெரிய பெரிய கற்களை வைத்து இதுபோன்ற ஈமச்சின்னத்தை  அமைத்தனர் . இதற்க்கு கல்திட்டை என்று பெயர்,சுருங்கச்சொன்னால் இன்றைய சமாதிகள் அமைத்துகொண்டிருப்பதற்கு இதுதான் துவக்கமாக இருக்கும் என கருதலாம். இதை இவ்வூர் மக்கள் கோட்டைக்கல் என்று அழைக்கிறார்கள். நாங்கள் இக்கிராமத்திற்கு அருகில் உள்ள எடமிச்சி கிராம் சின்னமலையில் அருகருகே ஐந்துக்கும் மேற்பட்ட கல்திட்டைகள் மற்றும் கல்வட்டங்களை கண்டறிந்தோம்  என தெரிவித்தார்.

காஞ்சிபுரம்: 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு..!
 எனவே இங்கு பெருங்கற்காலத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. இதன்காலம் சுமார் 3000 ஆண்டுகள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து இவ்வூர் மிகப்பழமையான ஊர் என்பதும் இவ்வூரில் சுமார் 3000ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. எனவே தமிழகத் தொல்லியல் துறை உடனடியாக இவ்விடத்தை ஆய்வு மேற்கொண்டு அவைகளை அடையாளப்படுத்தி  பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் இது குறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
 
காஞ்சிபுரம்: 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு..!
வரலாற்று சிறப்புமிக்க உத்தரமேரூரில் தொடர்ந்து பல்வேறு தொல்லியல் சார்ந்த பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட உத்தரமேரூர் அருகே உள்ள சிவன் கோவிலில் தங்க புதையல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?

RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்

Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்

ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?
மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?
RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்
RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்

Breaking News LIVE 19th Nov 2024: அறப்போர் இயக்கத்திற்கு எதிரான இபிஎஸ் தொடர்ந்த வழக்கு - டிச.11ம் தேதி ஒத்திவைப்பு

Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?

TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்

Embed widget