மேலும் அறிய
Advertisement
வார்டு வாரியாக வாட்ஸ்அப் குழு.. கசடு மேலாண்மை.. திடக்கழிவு மேலாண்மை.. நம்பர் ஒன்னாக அசத்திய கருங்குழியின் கதை..!
2022இல் வழங்கப்படும் சிறந்த பேரூராட்சிகளில் முதலாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி முதல் நிலை பேரூராட்சி பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி முதல் நிலை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான செயல்பாடுகள் திறன்பட மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நடைபெற சுதந்திர தின விழாவில் முதன்மை பேரூராட்சியாக செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை செயல் அலுவலர் M. கேசவன் மற்றும் பேரூராட்சி தலைவர் G. தசரதன் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பெற்றுக் கொண்டனர். சிறப்பாக செயல்பட்டு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து இருக்கும் கருங்குழி பேரூராட்சியில் சிறப்பு அம்சங்கள் குறித்து காணலாம்.
தென் இந்தியா அளவில் ...
கருங்குழி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் சிறப்பாக செய்யப்பட்டு வருவதை, தூய்மை இந்தியா இயக்கம் தரவரிசை படுத்தும்போது, தென் இந்தியா அளவில் உள்ள 671 நகரங்களில் 25வது ரேங்க் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளது
திடக்கழிவு மேலாண்மை
மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் 100 சதவீத அளவிற்கு மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்கப்பட்டு திடக்கழிவுகளை தரம் பிரித்து இயற்கை உரம் மற்றும் மண்புழு தயார் செய்யப்பட்டு வளம் மீட்பு பூங்கா சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குடிசை பகுதிகள் நிறைந்த கருங்குழி பேரூராட்சி பகுதியில் பொது / சமுதாய கழிவறைகள் 4 மட்டுமே இருந்தன , அதனை 3 ஆண்டுகளில் கூடுதலாக 11 இடங்களில் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது.
மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் அனைத்து கால்வாய்களும் உரிய காலத்தில் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கசடு கழிவு மேலாண்மை நிலையம் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முன்னோடியாக அமைக்கப்பட்டதை, பேரூராட்சிக்கு ஒப்படைத்த நாள் முதல் இதுவரை சிறப்பாக இயக்கி பராமரித்து வருகிறது. கசடு மேலாண்மை தொடர்ந்து கருங்குழி பேரூராட்சியில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய குளங்கள்
குடியிருப்புகளில் தோட்டம் அமைக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக அளவில் தோட்டம் அமைக்கப்பட்டள்ளது. சாலைகள், கால்வாய்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய மக்கள் தொகையின்படி தனி நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 70 லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டால் போதுமானதாக உள்ள நிலையில் குடிநீர் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி தனிநபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 110 லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. மழைநீர் செல்லும் இடங்கள் கண்டறிந்து அரசு இடத்தில் புதிய குளங்கள் 4 உருவாக்கி மழைநீர் சேகரிப்பு உருவாக்கப்பட்டது. மேலும் பழைய 21 குளங்களும் பராமரிக்கப்பட்டு, மழைக்காலங்களில் நீர் நிரம்பி வருகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மரக்கன்றுகள்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO) நிலையம் 3 இடங்களில் தனியார் முழு பங்களிப்பில், உபயோகிப்பாளர் கட்டணம் கொண்டு இயக்கி பராமரிக்கப்படுகிறது. அனைத்து தெரு விளக்குகளும் எரிய செய்வதுடன், கூடுதலாக புதிய தெருவிளக்குகள் 120 அமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் 38910 மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சியில் பூங்காக்கல் இல்லாமல் இருந்தை மூன்று ஆண்டுகளில் 9 சிறுவர் விளையாட்டு பூங்காக்கல் உருவாக்கப்பட்டது. இப்பேரூராட்சிக்கு சொந்தமான பொது திரவை இடங்களில் பாதுகாப்பு முள்வேலி அமைக்கப்பட்டு அதில் பொது மக்களிடையே மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கப்பட்டு, மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
வார்டு வாரியாக whatsapp குழு
மக்கள் குறைகளை தெரிவிக்க தொலைபேசி எண். விளம்பரப்படுத்தியும், வார்டு வாரியாக, வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்தும், சமூக வளைதலங்கள் முகவரி தெரிவித்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் முகவரி, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்வு முகாம் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து உரியவருக்கு பதிலளித்தல். பணியாளர்கள் நலன் அவர்களுக்கான திட்டங்கள் அமுல்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரிவசூல் தொடர்ந்து, 4வது ஆண்டுகளாக 100 சதவீதம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செயல் அலுவலர் M. கேசவனை ஏபிபி நாடு சார்பாக தொடர்பு கொண்டு கேட்ட பொழுது , திடக்கழிவு மேலாண்மையே கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறோம். 100% வரிவசூல் செய்து சாதனை படைத்துள்ளோம், இருவர் பூங்கா மரம் நடுதல், புதிதாக குளம் எடுத்தல், ஆகிய பணிகளை தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் செய்து வருவதாக தெரிவித்தார். தமிழக அரசு கருங்குழி பேரூராட்சியை அங்கீகரித்து, விருது வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இவை அனைத்திற்கும் கருங்குழி பேரூராட்சி மக்களின் ஒத்துழைப்பு காரணம் என்கிறார் கேசவன்.
கருங்குழி பேரூராட்சி போன்று தமிழகத்தில் இருக்கும் , அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion