மாணவர்களை இப்படி செய்ய வைக்கலாமா? அரசு பள்ளி ஆசிரியரின் வன்மம்.. நடந்தது என்ன ?
Chengalpattu: செங்கல்பட்டில் பள்ளி மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஅரசு பெண்கள் பள்ளி

"மதுராந்தகம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளை துப்பரவு பணியில், ஈடுபடுத்தும் பள்ளி நிர்வாகம், சமூக வலைதளங்களில் இது குறித்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"
அரசு பெண்கள் பள்ளி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்தலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வினோதமான நடைமுறை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்புகள் என பள்ளி மாணவிகளை வைத்தே தினமும் பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம், மற்றும் பள்ளி கழிப்பறை உள்பட அனைத்தையும் பள்ளி மாணவிகளே தான் சுத்தம், செய்து துப்புரவு பணியை செய்யவேண்டும் என புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: Mayiladuthurai: மூன்றரை வயது சிறுமி பாலியல் வழக்கு - மயிலாடுதுறை ஆட்சியரை தொடர்ந்து எஸ்பிக்கு சிக்கல்..?
பள்ளி மாணவிகள் வேதனை
இச்செயல் தினசரி மாணவிகளை கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பிரித்து துப்புரவு பணி செய்து வருவதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளார். மாணவிகள் கை வலி,தலைவலி, வயிற்றுவலி என சொன்னாலும், தேர்வு நேரத்தில் படிக்கவேண்டும் என சொன்னாலும் இந்த துப்புரவு பணிகளை நீங்கள்தான் செய்யவேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் கட்டாயப்படுத்தி வருவதாக அப்பள்ளி மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
மாணவிகள் வருத்துத்துடன் பேசும் காட்சிகள் வலைதளங்களில் பரவி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவம் ஒரு சில அரசு பள்ளிகளிலும் நடைபெறுவதாகவும், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கு பயில வரும் மாணவ மாணவிகளை துப்புரவு பணியில் ஈடுபடுவதை மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து, இச்செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ADMK - BJP Alliance: அதிமுக பாஜக கூட்டணி? "திமுகதான் எங்களுக்கு எதிரி" -எடப்பாடி பழனிசாமி...
விளக்கம் என்ன?
இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில் மாவட்ட கல்வி அலுவலரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது: மாவட்ட கல்வி அலுவலர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது . பள்ளி மாணவர்களை எச்சூழ்நிலையிலும் மற்றும் கல்வி சார்பில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

