மேலும் அறிய

'நந்தன்' பட பாணியில் கொடூரம்.. ‘என்னை மிரட்டுகிறார்கள் ‘ - ஊராட்சி மன்ற தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

போதிய படிப்பு அறிவு இல்லாததை பயன்படுத்தி அரசு அறிவிக்கும் திட்டங்கள், அரசு அனுப்பும் சுற்றறிக்கைகள், ஒப்பந்த பணிகள், பஞ்சாயத்து வரவு மற்றும் செலவு கணக்குகளை தனது கவனத்திற்கு கொண்டு வரமாட்டார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 141,‌ புதுப்பட்டு ஊராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் சாந்தி செல்வம். இவர் பழங்குடியின இருளர் இனத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவர் பதவி வகித்து வருகிறார். 

போலி பில்கள் 

இந்தநிலையில் தனக்கு படிப்பறிவு இல்லாததை பயன்படுத்தி, போலி கையெழுத்து போட்டு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை சாந்தி முன்வைத்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் சாந்தி அளித்த புகார் மனுவில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஒரு சில வார்டு உறுப்பினர்கள் இணைந்து போலி பில்களை உருவாக்கி, எனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்துவதாகவும், தனது குடும்பத்தை மிரட்டுவதாகவும் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

மேலும் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வது கிடையாது. கிராம சபை கூட்டம் முடிந்த பிறகு வந்து கையெழுத்து போட்டுக் கொள்வது. போதிய படிப்பு அறிவு இல்லாததை பயன்படுத்தி அரசு அறிவிக்கும் திட்டங்கள், அரசு அனுப்பும் சுற்றறிக்கைகள், ஒப்பந்த பணிகள், பஞ்சாயத்து வரவு மற்றும் செலவு கணக்குகள் தனது கவனத்திற்கு கொண்டு வராமலே சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

பல்வேறு முறைகேடுகள்

செலவுக்கான பில்களை குறைவாக தன்னிடம் கூறிவிட்டு அதில் கையெழுத்து பெற்று விடுவதாகவும், அவ்வப்போது ஏரி வேலைக்கு எனக்கூறி கையெழுத்து பெறுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். தெரு மின்விளக்குகளை அமைப்பது கையாடல், இருளர் மக்களுக்கு தன்னார்வலர்கள் கொடுத்த பொருட்களுக்கு போலி பில் கொடுத்து பெற்றது, ப்ளீச்சிங் பவுடர் வாங்காமல் பில் போடுவது, என பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். 

Mens Day 2024 Wishes: சர்வதேச ஆண்கள் தினம்; அன்பிற்குரிய ஆண்களுக்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ்!

நீ என்ன பெரிய தலைவரா ?

இதுகுறித்து சாந்தி கூறுகையில், ஏற்கனவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை வைத்துள்ளார். நீ என்னை பெரிய தலைவரா? என மிரட்டுகிறார்கள். துணைத்தலைவரின் கணவர் என்னை மிரட்டுகிறார்.

கையெழுத்து கேட்க மட்டும் வருவார்கள் விவரம் கேட்டால், சொல்ல மாட்டார்கள் அலட்சியமாக பதில் சொல்வார்கள். ஓடீபி கேட்டால் ஓடிபி சொல்ல வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வந்தார்கள். ஒரு கட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் பிடித்துக் கொடுத்து விடுவோம் எனவும் மிரட்டினார்கள் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget