2029ல் பூமியை நெருங்கும் அபாயகரமான சிறுகோள்..! ஆபத்தை எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
பூமியை தாண்டி ஒரு 'அபாயகரமான சிறுகோள்' பிறகு 2029 ஆம் ஆண்டு செல்ல உள்ளது. இது அளவில் பெரியதாகவும், அபயாகரமானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுவரை நமது கிரகத்தை கடந்த பல சிறுகோள்களைப் போல இது இருக்காது, இது பூமியைக் கடந்து செல்லும். மிகப்பெரிய மற்றும் வேகமான சிறுகோள் என்பதால் இது ஆபத்தானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பெரிய சிறுகோள் 1,717 மெகா டன்கள் மதிப்புள்ள ஆற்றல் வெளியிடும் சக்தி கொண்டது.
ரஷ்ய விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, இந்த சிறுகோள் ஏப்ரல் 2029 இல் பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நம்மைக் கடக்கும்போது, பூமியின் மேல் பரப்பில் இருந்து வெறும் 39,000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். இந்த தொலைவு தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைக் கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருப்பதை போன்றது.
Apophis சிறுகோள் குறித்து 2004 இல் NASA வானியலாளர்களால் முதன் முதலில் கவனிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது மிகவும் அபாயகரமான சிறுகோள்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது.
1115 அடி அல்லது 340 மீட்டர் விட்டத்தில் இருக்கும் Apophis மிகப் பெரியது அல்ல, ஆனால் சப்தம் எழுப்பும் அளவுக்கு பெரியது. இருப்பினும், குறைந்த பட்சம் அடுத்த 100 ஆண்டுகளில் Apophis பூமியுடன் மோதாது என்பதால் நாசா அதை ஆபத்து பட்டியலில் இருந்து நீக்கியது. Apophis ஆபத்து போக்கில் இல்லை என்றாலும், அது ஆர்வத்துடன் கண்காணிக்கப்படுகிறது. அது நெருங்க நெருங்க மேலும் அதன் நிலைப்பாடு என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும்.
சமீபகால வரலாற்றில் இவ்வளவு பெரிய சிறுகோள் பூமிக்கு இவ்வளவு தொலைவில் வருவது இதுவே முதல் முறை. வேகம் நம்பமுடியாத அளவிற்கு இருக்கும். மேலும் இது 97% சிறுகோள்களை விட பெரியதாக இருக்கும். பூமியின் சுற்று வட்டப் பாதையை இதுபோன்று சிறுகோள்கள் கடப்பது இது முதன் முறையல்ல. இதற்கு முன்பும் சிறுகோள்கள் கடந்து சென்று உள்ளன. விண் மீன்கள் கடந்து சென்றுள்ளன. இவை பூமியின் மீது அன்றாடம் மோதி வெடித்து வருகின்றன. அப்போது பெரிய அளவில் பூமியின் மேல் பரப்பில் ஒளி தெரியும். நமது சூர்ய மண்டலத்தின் ஆரம்பகால எச்சங்களில் இருந்து உருவானதுதான் சிறுகோள் என்று கூறப்படுகிறது.
சில சமயங்களில் இவை சிறிய கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சிறிய பாறைகள் போன்று இருக்கும் இவை செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அனைத்து சிறு கோள்களும் சரியான வடிவத்தில் இல்லாமல் இருக்கும். சிறுகோள்கள் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை சுழன்றும் செல்லும். அப்போது தவறுதலாக தடுமாறி செல்லும் என நாசா கூறுகிறது.