மேலும் அறிய
Advertisement
உடல்நிலை பாதித்த நிலையிலும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வாக்களித்தார்
உடல்நலம் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வென்டிலேட்டர் உதவியுடன் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. கொரோனா தொற்று, கோடை வெயில் என எதையும் பெரிதுபடுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். திமுக எம்பி கனிமொழி, திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் ஆகியோரும் பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தனர்.
இந்நிலையில்,உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தனது ஜனநாயக கடமையாற்றினார். அவர், வென்டிலேட்டர் உதவியுடன் சக்கர நாற்காலியில் வந்து ஆர்.கே.நகரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion