"தொடர்ந்து பரவும் கொரோனா" - தஞ்சையில் 27 மாணவர்களுக்கு நோய் தொற்று.!
தஞ்சையில் 47 பேருக்கு கொரோனா பரவியுள்ள நிலையில் அதில் 27 பேர் பள்ளி மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது
இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், கொரோனா பரவளின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 394 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டில் 81 பேருக்கும், கோவையில் 77 பேருக்கும், திருவள்ளூரில் 71 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக தஞ்சையில் 47 பேருக்கு கொரோனா பரவியுள்ள நிலையில் அதில் 27 பேர் பள்ளி மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
தனியார் பள்ளிகளை சேர்ந்த 21 மாணவர்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 6 மாணவர்கள் என்று 27 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கொரோனா பரவி வருவதால் பெற்றோர் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான பாண்டியராஜன் அவர்கள், கொரோனா குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும். தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.