தேங்காய் துருவ கஷ்டமா இருக்கா? இந்த டெக்னிக் உங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். ட்ரை பண்ணிப்பாருங்க!
உடல் இயக்கத்துக்கு ஆரோக்கியமான அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் அடங்கியுள்ளதால் பெரும்பாலான வீடுகளில் குழம்பு, பொரியல் போன்றவற்றிலும் தேங்காயைப்பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமைக்கும் போது தேங்காய் துருவ வேண்டும் என்றாலே பலருக்கு மிகவும் கஷ்டான விஷயமாக இருக்கும். ஆனால் சில நிமிடங்களிலேயே தேங்காய் துருவுவதற்காக உள்ள இந்த புதிய டெக்னிக் உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.
இயற்கை நமக்கு தந்த வரப்பிரச்சாதங்களில் ஒன்று தான் தேங்காய். எந்த கெமிக்கலும் சேர்க்கமுடியாத உணவுப்பொருள் என்றும் இதனைக்கூறலாம். மேலும் தேய்காயை அரைத்து குழம்பு போன்றவற்றில் சேர்க்கும் போது உணவிற்கு கூடுதல் சுவையளிக்கும். ஆனால் என்ன? தேங்காய் துருவுவது தான் கஷ்டமான காரியம். இதற்காகவே அவியல், தேங்காய் பால் சாதம், இடியாப்பம் போன்ற பல்வேறு உணவுகளை செய்வதை நாம் தவிர்த்திடுவோம்.
இதுபோன்று மேற்கொள்பவர்களாக நீங்கள்? தேங்காய் துருவ மிகவும் சிரமப்படுகிறீர்களா?அப்படின்னா உங்களுக்காகவே சில நிமிடங்களில் தேங்காய் துருவ ஒரு ஈஸியான டெக்னிக் இருக்கு. அது என்னான்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..
தேங்காய் துருவதற்கு இனி உங்களுக்கு கஷ்டம் வேண்டாம் என்றும், ஒரு நாளைக்கு தேங்காய் துருவி வைத்தாலே போதும் ஒருவாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு நான் சொல்லும் டெக்னிக்க கொஞ்சம் டிரைப்பண்ணிப்பாருங்கள் என தனது யூடியூப் சேனல் வாயிலாகத் தெரிவித்துள்ளார் சமையல் கலைஞர் சிவராமன்.
முதலில் தேங்காயை எவ்வித சிரமமும் இன்றி எளிதாக உடைக்க வேண்டும் என்பதற்காக, தேங்காயை தண்ணீரில் நனைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை உடைத்து, இரண்டு தேங்காய் மூடிகளையும் இட்லி சட்டியில், இட்லி அவிப்பது போல சுமார் 5-10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இதனையடுத்து தேங்காயை இட்லி சட்டியில் இருந்து வெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும். வழக்கமாக கத்தி அல்லது தேங்காய் எடுப்பதற்காக உள்ள கத்தியைப் பயன்படுத்தி எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு தேங்காயில் உள்ள மேல்தோலை நீங்கி சிறு சிறு துண்டுகளாக்கிக்கொள்ள வேண்டும்.
நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து இந்த தேங்காய் துருவலை பிரிஜிட்டில் வைத்து சுமார் ஒரு வாரத்திற்கு கூட நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். கெட்டுப்போவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த டெக்னிக் நீங்களும் இனி பயன்படுத்தப்பழகுங்கள் என்கிறார்.
இனி புதிய டெக்னிக்க பயன்படுத்தி தேங்காயை துருவுவதற்கு கஷ்டப்படவும் வேண்டாம், நமக்கு பிடித்த உணவுப்பொருள்களை ஸ்கிப் பண்ணாம சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக நாம் பயன்படுத்தும் தேங்காயில் புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்களும் வைட்டமின் சி, அனைத்து வரை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற உடல் இயக்கத்துக்கு ஆரோக்கியமான அனைத்துச் சத்துக்களும் அடங்கியுள்ளதால் பெரும்பாலான வீடுகளில் குழம்பு, பொரியல் போன்றவற்றிலும் தேங்காயைப்பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.