Kola Pasi Series-3: பல்லவர் நாட்டில் ஒரு கடலோரப் பயணம் - பாண்டிச்சேரி முதல் சிதம்பரம் வரை ஒரு உணவு உலா
’’பண்ருட்டி பகுதியில் பன்றி கறியை வைத்து செய்கிற தீச்ச சோறு அல்லது எரிபட்ட சோறு வேறு எங்கும் கிடைக்காத ஒரு பண்டம்’’
சென்னையில் இருந்து ஒரு நாள் காரில் மதுரைக்கு கிளம்பினேன். என்னுடன் நண்பர் சேகர் வந்தார். அவரிடம் நான் இங்கிருந்து மதுரைக்கு போக எவ்வளவு நேரமாகும் என்றேன், அவர் கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென ஆறு மணி நேரத்தில் சென்று விடலாம் என்றார். நான் சிரித்துக் கொண்டே இந்த முறை நாம் அப்படிச் செல்லவில்லை ஐந்து நாட்களில் செல்கிறோம் என்றேன். எங்கள் பயணம் சென்னையில் இருந்து புறப்பட்டது, கோவளத்தில் ஒரு தேநீருடன் திட்டமிட்டோம். மதியம் சத்ராஸ் கோட்டையை பார்த்துவிட்டு அங்கிருக்கும் அலிபாய் பிரியாணி கடையில் மட்டன் பிரியாணியும் கமகமக்கும் இறால் ப்ரையும் ஒரு கை பார்த்து விட்டு கடல் பார்த்தபடியே பாண்டிச்சேரி நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தோம்.
Kola Pasi Series-4 | புத்தூர் ஜெயராமன் கடை முதல் திருவாரூர் மனோன்மணி வரை - பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனுடன் ஒரு பயணம்
பாண்டிச்சேரிக்குள் நுழையும் போதே என்னை வசீகரித்து சுண்டி இழுக்கும் ஒரு மனம் இருக்கிறது என்றால் அது பிரெஞ்சு ரோல்களின் மனம், பிரான்சு நாட்டில் இருந்து இந்த ரொட்டி பாண்டிச்சேரிக்கு வந்து இந்த ஊரின் பண்டமாகவே மாறிப்போனது. இதை ஒத்த ரொட்டிகள் பெருநகரங்களில் விலை மிகவும் அதிகமாக இருக்கும் ஆனாலும் பாண்டிச்சேரியில் இருக்கும் இந்த ரோல்களுக்கு ஒரு தனித்த மனமும் குணமும் இருக்கும். பாண்டிச்சேரியில் உள்ள உயர்தர பிரெஞ்சு அடுமனைகளில் ஏராளமான க்ரோசண்ட், இறால் ரிசோட்டோ, பீஃப் பேட்டீஸ், கிர்ல்ட் மீன் ரோசிட்டோ என பலவிதமான பண்டங்கள் கிடைக்கும். மட்டன் பச்சைப்பட்டாணிக் கறி, ஆட்டுக்கறி அஸாத் என பல வித இந்தோ-பிரெஞ்சு உணவு வகைகளும் கிடைக்கும்.
பாண்டிச்சேரியில் கிடைக்கும் முந்திரி ஊத்தாப்பமும் வடைகறியும் சாப்பிட்டு விட்டு செட்டித் தெருவில் உள்ள சாய்ராம் காபியில் ஒரு காபியை குடித்து விட்டால் உங்கள் நாள் கச்சிதமான தொடங்கியது என்று அர்த்தம். நான் பாண்டிச்சேரியில் வேலை செய்த ஓர் ஆண்டு காலத்தில் காபி அல்லது காலை உணவுக்கு ஜவகர்லால் நேரு தெருவில் உள்ள இந்தியா காபி ஹவுசுக்கு செல்வேன். 1958ல் இருந்து செயல்பட்டு வரும் இந்த இடம் பாண்டிச்சேரியின் பாரம்பரியமிக்க இடங்களில் ஒன்று. பாண்டிச்சேரியில் பாதாம் பிசின், சப்ஜா விதைகளுடன் பால் சர்பத் கிடைக்கும். நேருவீதியில் ஜவுளி எடுக்க வருபவர்கள், காந்தி வீதியில் உலவுபவர்கள் அனைவரும் பால் சர்பத் அருந்தாமல் வீட்டுக்கு கிளம்ப மாட்டார்கள். இர்பான் ரெஸ்டாரண்டில் மந்தாரை இலையில் பிரியானி பார்சல் கட்டப்படுவதை பார்ப்பதே ஒரு அழகு தான். சுல்தான் பெட்டில் இஸ்லாமியர்கள் நடத்தும் பல அருமையான அசைவ உணவகங்கள் உள்ளன. பாண்டிச்சேரியில் 45 வருடங்களாக ஒரு பாட்டி வடைகள் சுட்டு வருகிறார். மீன் வடை, இறால் வடை, சிக்கன் வடை, சிக்கன் கைமா வடை, முட்டை போண்டா என இந்த பாட்டி சுட்டு எடுக்க எடுக்க வடைகளுக்கு சிறகு முளைப்பதைப் பார்த்து பிரான்ஸ் நாட்டில் இருந்து பல விருதுகள் இந்த பாட்டி நோக்கி வந்துள்ளது.
Kola Pasi Series-3: பல்லவர் நாட்டில் ஒரு கடலோரப் பயணம் - பாண்டிச்சேரி முதல் சிதம்பரம் வரை ஒரு உணவு உலா
பாண்டிச்சேரியில் தந்தூரி புல்லட் சிக்கன், மட்டன் கைமா சமோசா, ஆட்டுக்கால் சூப் என ஏராளமான மாலைநேர சாலையோர உணவுகள் வந்துவிட்டன. ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி வீதிகளில் சண்டே மார்க்கெட் பாண்டியின் அடையாளங்களில் ஒன்று, இந்த மார்கெட்டில் விதவிதமான சாலையோர உணவுகள் கிடைக்கும். பாண்டிச்சேரி முழுவது நீங்கள் சுற்றியலைந்தால் இந்த நிலத்தில் நடைபெற்றிருக்கும் பலப்பல ஆட்சி மாற்றங்கள் நினைவுக்கு வரும், ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் ஒவ்வொரு ருசியை இந்த நிலத்திற்கு கொண்டு வந்தது. பிரான்சு உணவுகள், மத்தியதரைக்கடல் பகுதியின் உணவுகள், இஸ்லாமிய உணவு வகைகள் என இவை எல்லாம் போதாது என்று ஆரோவிலால் ஈர்க்கப்பட்டவர்கள் இங்கே நிரந்தரமாக தங்கி விட அவர்களும் பாண்டிச்சேரியின் உணவு பட்டியலை மெருகேற்றினார்கள்.
பாண்டிச்சேரிக்கு தெற்கில் அரியாங்குப்பம் அருகில் இருக்கும் அரிக்கமேட்டில் தான் இந்தியாவின் முக்கிய அகழாய்வுகள் நடந்ததுள்ளன. அங்கு ஏராளமான ரோமானிய மட்பாண்டத்தின் துண்டுகளும் கிடைத்தது. தமிழர்களுக்கும் ரோமாபுரிக்கும் இருந்த வர்த்தக தொடர்பும், அன்றே நாம் சமையலுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மண் பாத்திரங்களை பாவித்திருக்கிறோம் என்கிற பெருமிதத்துடன் கடலூரில் ஒரு மல்லி சிக்கன் பார்சல் வாங்கி கொறித்துக் கொண்டே பண்ருட்டி நோக்கி சென்றோம். பண்ருட்டி பகுதியில் பன்றி கறியை வைத்து செய்கிற தீச்ச சோறு அல்லது எரிபட்ட சோறு வேறு எங்கும் கிடைக்காத ஒரு பண்டம். அந்தப் பகுதியில் கம்பு மாவில் செய்யும் கம்மா அடை அல்லது ஓட்டை வடை, முந்திரி அறுவடை செய்யும் காலத்தில் கறிக்குழம்பில் போடப்படும் முந்திரி பச்சை பயிறு, மெண்டு ஊத்துன பணியாரம், பா பணியாரம், முந்திரி வடை என இவை எல்லாமே தமிழகத்தில் வேறு எங்கும் இந்தப் பதத்தில் கிடைக்காது.
Kola Pasi Series-2 | மதுரை என்றாலே ருசியின் முகவரி; உணவின் தலைநகரம்...!
உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகள் பிச்சாவரத்தில் உள்ளது, தமிழகத்தின் மிகத்தனித்துவமான ஒரு பகுதி, இந்த காடுகளை போலவே இங்கு கிடைக்கும் மீன்களும் தனித்துவமானவை. சுடச்சுட இங்கே பல வகை மீன்களுடன் மீன் சாப்பாடுகள் பிரபலம். சிதம்பரத்தின் அடையாளமாகவே திகழும் ஒரு பண்டம் என்றால் அது கத்திரிக்காய் கொத்சு தான். கத்திரிக்காயை சுட்டு அல்லது பொறித்து செய்வார்கள். சம்பா சாதத்தை மிளகு சீரகம் எல்லாம் சேர்த்து வடிப்பார்கள், சம்பா சாதம் கொத்சு கூட்டணி பிரமாதமாக இருக்கும். அதே போல் இந்தப் பகுதியில் வெண்பொங்கல் போலவே ஆனால் கொஞ்சம் செய்முறைகள் மாற்றி சொஜ்ஜி என்கிற ஒரு உணவு கிடைக்கிறது. உடைத்த அரிசி உப்புமா, வெண்ணெய் கசாயம், கல்கண்டு சாதம் இந்த ஊரில் முக்கிய உணவுகளில் சில.
Kola Pasi Series-1 | தமிழக உணவுலகில் ஒரு உலா
தில்லை நடராஜர் கோவில் பிரசாதமாக வழங்கப்படும் கல்கண்டு சர்க்கரைப் பொங்கல் இந்த ஊரின் முக்கியமான ஒரு பண்டம். அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயில இந்தியா முழுவதில் இருந்தும் வந்து மாணவர்களுக்காகவே இங்கே பல தனித்த சப்பாத்தி கடைகள் இயங்குகின்றன. மூர்த்தி கபே பரோட்டா, லாப்பா, சால்னா, முட்டை சட்டினி - கிருஷ்ண விலாஸ் கடையின் சைவ உணவுகள், வாத்தியார் கடையின் இட்லி என இந்த மூன்றையும் சாப்பிடாமல் சிதம்பரம் பயணம் நிறைவு பெறுவதில்லை. பொதுவாகவே கடற்கரை நகரங்கள் கிராமங்கள் யாவையும் கலாச்சார பரிமாற்றங்கள் நிகழும் மையங்களாகவே இருந்துள்ளது, பாண்டிச்சேரி முதல் சிதம்பரம் அரை காலம் தோறும் புதிய புதிய மனிதர்கள் புதிய ருசிகளை கொண்டு வந்து சேர்க்கும் இடங்களாகவும் அதை ஏற்கும் நிலமாகவும் இருந்துள்ளது.