மேலும் அறிய

EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்

EPS Slams DMK: டங்கஸ்டன் விவகாரத்தில் திமுகவின் நாடகம் அமபலமாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

EPS Slams DMK: டங்கஸ்டன் விவகாரத்தில் திமுகவின் செயல்பாட்டை, எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், விடியா திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. 03.10.2023 அன்று திமுக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல், மாறாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமை மாநில அரசுக்கே வழங்கவேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு நாயக்கர்பட்டி சுரங்கத்திற்கான நில தரவுகளை அனுப்பிய திமுக அரசு, ஏலம் நடத்த எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், "2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் தொடங்கியது முதல் 07.11.2024 அன்று ஏல முடிவு அறிவிக்கும் வரை மாநில அரசிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை" என்று மீண்டும் ஒரு முறை மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு இடைப்பட்ட 10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

இதைத் தான் சட்டமன்றத்திலும், ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து நான் சுட்டிக்காட்டி "10 மாதங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அரசாங்கம் தானே நடத்துறீங்க?" என்று விடியா திமுக அரசை நோக்கி கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல், சட்டமன்றத்தில் ஆ, ஊ என்று அமைச்சர் பதற்றத்தில் பேசியும் , முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற அரசியலும் மட்டுமே செய்து வந்தனர். தூங்குபவர்களை எழுப்பலாம்; கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது ! உண்மை மீண்டும் அம்பலப்பட்டு இருக்கிறது. மேலூர் மக்களுக்கு திமுக அரசு இழைத்துள்ள இந்த மாபெரும் துரோகத்திற்கு ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சொல்வது என்ன?

முன்னதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “சுரங்கத்தை ஏலம் விடும் நடவடிக்கை துவங்கும் என தமிழக அமைச்சருக்கு கடிதம் எழுதிய பிறகு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் உள்ளிட்ட 3 முக்கிய தனிமங்கள் குறித்த விவரங்களை அளிக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது.

தமிழக புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர், கடந்த பிப்.,8 ல் அளித்த கடிதம் மூலம் நாயக்கர்பட்டி பிளாக் உள்ளிட்ட 3 பிளாக்குகளின் விவரத்தை அளித்தார். அப்போது, பல்லுயிர் பகுதிகள் குறித்து தெரிவித்து இருந்தாலும், அங்கு ஏலம் விடுவதற்கு எதிராக எந்த பரிந்துரையையும் அளிக்கவில்லை.

முதலில் ஏலம் விடப்பட்ட பிப்., முதல் நவ., 7 வரையிலான காலகட்டத்தில் ஏலம் தொடர்பாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் நடத்திய பல கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொண்டது. ஆனால், ஏலம் தொடர்பாக தமிழக அரசு எந்த எதிர்ப்பையோ, கவலையையோ அல்லது எந்த தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை.

ஆனால், ஏலம் விடப்பட்ட பிறகு, சுரங்கம் அமையும் பகுதியில் பல்லுயிர் தளம் உள்ளது எனக்கூறி, இந்த ஏலத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனவே, சுரங்கம் அமையும் பகுதியில் உள்ள பல்லயிர் தளம் உள்ளபகுதிகள் எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து ஆய்வு செய்வது, பல்லுயிர் தளம் இல்லாத பகுதிகளில் சுரங்கம் அமையும் பிளாக்குகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என ஜிஎஸ்ஐ., கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
"சிவகுமார் டான்சைப் பாத்த ஒரே காமெடியா இருந்துச்சு" ஓப்பனா போட்டு உடைத்த பாலா!
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Embed widget