மேலும் அறிய

மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!

வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் தி.மு.க.விற்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற அன்புமணியின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் களம் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே இந்த அரசியல் களம் மிகவும் சூடுபிடிக்கத்  தொடங்கியுள்ளது.

சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்:

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய விஜய் தனது முதல் வியூகமாக தி.மு.க. கூட்டணியை உடைப்பதை கையில் எடுத்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அறிவிப்பு, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பற்றிய பேச்சு என்று விஜய் கூறியதே அதற்கு சான்றாகும். 

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியாக விசிக வளர்ந்துள்ளது. 25 தொகுதிகளை வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் கேட்போம் என்ற வன்னியரசின் பேட்டியும் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பக்கம் விசிக இருப்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏனென்றால், பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ள தி.மு.க. விசிகவிற்கு 25 தொகுதிகள் தருவது என்பது சாத்தியமற்றது. 

வாக்கு வங்கி:

தி.மு.க. கூட்டணியில் இருந்து விசிகி விலகினால் அந்த இடத்தை நிரப்பும் வகையில் மற்றொரு வலுவான கட்சியை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க. திட்டம் வகுக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு நிகரான மிகப்பெரிய கட்சியாக இருப்பது பா.ம.க. ஆகும். குறிப்பாக, வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்துள்ள பா.ம.க. ஒவ்வொரு தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 

ஆனால், கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் அங்கம் வகித்த பிறகு அடுத்த ஜெயலலிதா ஆட்சி முதல் தற்போதைய மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு அதிகாரத்திலும் இல்லாமல் பா.ம.க. உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வா?

இந்த சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினால், பா.ம.க. தி.மு.க. பக்கம் சாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற பாமக போராட்டத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் தி.மு.க.விற்கு நிபந்தனையற்ற ஆதரவு தர பா.ம.க. தயார் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணியில் இல்லாத பா.ம.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,  2026 சட்டமன்ற தேர்தலில் கடும் சவால் அளிக்கும் விதமாக தி.மு.க. பக்கம் பா.ம.க. சாயும் என்று கருதப்படுகிறது. 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாய்ந்தால் தி.மு.க.வுடன் பா.ம.க. மிக எளிதாக கைகோர்க்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கான அச்சாரமே அன்புமணி நேற்று திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தர தயார் என்று கூறியதாக கருதப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget