மேலும் அறிய

ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMK

அதிமுகவுடன்  டிடிவியின் கூட்டணி ப்ளான் ... பாஜக கொடுத்த அசைமெண்ட்(voice over)

திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற , தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை எப்படியாவது இணைக்க வேண்டும் என்று டிடிவி தினகரனுக்கு டெல்லி பாஜக அசைமெண்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை திமுக, அதிமுக, பாஜக , தவெக , நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே ஆரம்பித்து விட்டன. ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகளும் திட்டம் தீட்டி வருகின்றனர்.

கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே தான் போட்டி போட்டது. இரண்டு கட்சிகளுமே படுதோல்வி அடைந்தது. இது திமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தது. தேசிய ஜன நாயக கூட்டணியில் இருந்து போட்டி போட்ட  அமமுக மற்றும் பாமகவும் தோல்வியையே தழுவின. 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக தனித்தனியே போட்டி போட்டால் அது திமுகவின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அதிமுகவை மீண்டும் அக்கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் டெல்லி சென்ற டிடிவி தினகரன் 2026 கூட்டணி குறித்து டெல்லியில் முக்கிய பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினாராம். முன்னதாக டிடிவி தினகரன் ”பாஜக அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அது ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும். இல்லையென்றால் அழிந்துவிடும்” என்று கூறினார். 

இந்த நிலையில் தான் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்திய டிடிவி மீண்டும் அதே கருத்தையே அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். எப்படியாவது மீண்டும் அதிமுகவை தங்கள் கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என்று டெல்லி பாஜக டிடிவி தினகரனுக்கு அசைமெண்ட் கொடுத்துள்ளதால் தான் அவர் இந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக , அமமுக இணைந்து சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
விடுமுறைக்கு பின் கூடும் சட்டசபை... 2 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்!
விடுமுறைக்கு பின் கூடும் சட்டசபை... 2 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்!
Weather Forecast Today: மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று நிலவரம் என்ன? லேட்டஸ்ட் அப்டேட்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று நிலவரம் என்ன? லேட்டஸ்ட் அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
Embed widget