மேலும் அறிய

Condoms | செக்ஸில் பிரச்சனையா? ஆணுறை பயன்படுத்தினால் வலியா? இதுதான் தீர்வு என்கின்றனர் நிபுணர்கள்..

ஆணுறைகளை நீங்கள் பயன்படுத்தினாலும், கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும்போது குளுமையான இடத்தில் ஆணுறைகளை வைத்திருக்க வேண்டும்.  

லூப்ரிகேட் தன்மைகொண்ட ஆணுறைகள் முதல் நெகிழ்வுத்தன்மை கொண்ட ப்ராண்டுகளின் ஆணுறைகள்  நீங்கள் உபயோகிக்கும்போது உங்களது தாம்பத்ய உறவில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

செக்ஸ் அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாகும். இந்த வாழ்வில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்களின் தாம்பத்ய உறவு மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் கணவன் மற்றும் மனைவி இருவரும் பிரியக்கூடிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த பிரச்சனைக்கு என்ன செய்வது? எப்படி தீர்வு காண வேண்டும் என்று தெரிந்துக்கொள்வதில் பலருக்கு இன்னமும் தயக்கம் மற்றும் வெட்கம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து சில கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே தாம்பத்ய உறவில் எவ்வித பிரச்சனையும் இன்றி வாழ முடியும்.  தாம்பத்ய உறவில் பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் எழக்கூடும். இன்று அதுபோன்ற சந்தேகங்களில் ஒன்றாக ஆணுறை எதனைப் பயன்படுத்த வேண்டும்? நம்முடன் தாம்பத்ய உறவில் இருக்கும் நம் பார்ட்னருக்கு வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளுக்கு இன்றைக்கு விடை காண்போம்.

Condoms | செக்ஸில் பிரச்சனையா? ஆணுறை பயன்படுத்தினால் வலியா? இதுதான் தீர்வு என்கின்றனர் நிபுணர்கள்..

லூப்ரிகேட்டட் ஆணுறைகளைப் பயன்படுத்துதல்:

லேட்டெக்ஸ் வகை ஆணுறைகள் அனைத்துமே லூப்ரிகேட்டட் தன்மைக் கொண்டது. தாம்பத்ய உறவின் போது மிகச்சரியான லூப்ரிகேஷன் இருந்தால் மட்டுமே தாம்பத்ய உறவில் சௌகரியமாகவும், உறவின் போது உராய்வு மற்றும் வலியைக் குறைக்க முடியும். எனவே லூப்ரிகேட்டட் வகை ஆணுறைகளைப் பயன்படுத்தலாம்.  தற்போது பெரும்பாலான மருந்துக்கடைகளில் இதுபோன்ற ஆணுறைகள் விற்பனையாகிறது.

இதேபோன்று லேட்டெக்ஸ் இல்லாத ஆணுறைகளை நீங்கள் பயன்படுத்தலாம். இவை உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாது. ஒரு வேளை உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துவதாக இருந்தால் பாலியூரிதேன் அல்லது பாலிசோப்ரீன் போன்ற மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்தலாம். இவைதான் சமீப காலங்களாக மக்களிடம் பிரபலமாகிவருகிறது. மேலும் இதுபோன்ற ஆணுறைகளைப் பயன்படுத்தும்போது பாலியல் ரீதியான தொற்றுகளும் தடுக்கப்படுகின்றன. இத்துடன் எண்ணெய் சார்ந்த மற்றும் சிந்தடிக் லேட்டெக்ஸ் மூலப்பொருள்களைக் கொண்டு பாலிசோப்ரீன் ஆணுறைகள் தயாரிக்கப்படுவதால் தாம்பத்ய உறவில் அலர்ஜி ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

இதுபோன்ற ஆணுறைகளை நீங்கள் பயன்படுத்தினாலும் உங்களுக்கு சில சமயங்களில் எரிச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. இதுப்போன்ற பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், வெவ்வெறு பிராண்ட்களில் ஆணுறைகளை வாங்கி பயன்படுத்த ஆரம்பியுங்கள். இல்லாவிடில் ஆணுறைகளினால் ஏற்படும் எரிச்சலினால் உங்கள் பார்ட்னருக்கு சிறுநீர் பாதை தொற்று மற்றும் பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்று போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இதனை நினைவில் வைத்து நீங்கள் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

Condoms | செக்ஸில் பிரச்சனையா? ஆணுறை பயன்படுத்தினால் வலியா? இதுதான் தீர்வு என்கின்றனர் நிபுணர்கள்..

ஒருவேளை நீங்கள் மாறி மாறி வெவ்வேறு பிராண்டுகளைப் பயன்படுத்தி பிரச்சனை ஏற்பட்டால், பெண்ணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் அலர்ஜிகளைத் தடுக்க முடியும். மேலும் ஆணுறைகளைப்போன்று இதிலும் கருத்தடை மற்றும் பாலியல் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றை தடுக்கமுடியும். பொதுவாக பெண்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும் இலகுவானவை என்பதால் அதற்கேற்றால் மிக மிருதுவான  பிளாஸ்டிக் மூலப்பொருளில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று ஆணுறைகளை நீங்கள் பயன்படுத்தினாலும், கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் போது குளுமையான இடத்தில் ஆணுறைகளை வைத்திருக்க வேண்டும்.  வெப்பம் மிகுந்த இடத்தில் வைத்திருப்பதைப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் வெப்பம் நிறைந்த இடங்களில் ஆணுறைகளை வைக்கும்போது அதில் உள்ள ஈரப்பசை காய்ந்துவிடுகிறது. எனவே இதனைப் பயன்படுத்தும் போது உங்களது பாட்னருக்கு சௌகரியமாக இல்லாமலும், உரிய பாதுகாப்பு கிடைக்காமலும் போய்விடுகிறது. எனவே எவ்விதமான ஆணுறைகளை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னதாக சரியானது எது எனத் தெரிந்துகொண்டு பயன்படுத்துங்கள்.

குறிப்பாக செக்ஸ் உறவுக்காக ஆணுறைகள் போட்டு பிறப்புறுப்பில் அழுத்தம் கொடுக்கும்போது, உராய்வு மற்றும் அழுத்தம் ஏற்படும். இதோடு மட்டுமின்றி வலியும் ஏற்படும் என்பதால் முதலில் உங்களது பார்ட்னரை ரிலாஸ் ஆக வைத்துக்கொண்ட பின்பாக செக்ஸ் உறவிற்குள் செல்லுங்கள். இதனால் உங்கள் தாம்பத்ய உறவில் எவ்வித பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பிருக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget