Household Tips :மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரிய.. சர்க்கரை தண்ணீர் விடாமல் இருக்க.. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!
மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரிய, சர்க்கரை தண்ணீர் விடாமல் இருக்க டிப்ஸ்களை பார்க்கலாம்.
மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரிய..
ஒரு மீடியம் சைஸ் மெகுவர்த்தி அரைமணி நேரம் அல்லது 45 நிடங்களில் எரிந்து முடிந்துவிடும். ஆனால் நாம் ஒரு சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் மெழுகுவர்த்திகள் வழக்கத்தை விட கூடுதல் நேரம் எரியும். அதற்கு ஒரு கொட்டாங்குச்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். மெழுகுவர்த்தியின் திரியை பற்ற வைத்து உருகும் மெழுகில் இரண்டு மூன்று சொட்டுகளை கொட்டாங்குச்சியின் உள்பகுதியில் நடுவில் விட வேண்டும். பின் மெழுகுவர்த்தியை அதன் மீது நிற்க வைக்க வேண்டும். இப்போது மெழுகுவர்த்தி கொட்டாங்குச்சியின் நடுவில் நின்ற நிலையில் எரிந்து கொண்டிருக்கும். இப்போது கால் டம்ளர் தண்ணீரை கொட்டாங்குச்சியினுள் ஊற்றி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மெழுகுவர்த்தி வழக்கத்தை விட கூடுதல் நேரம் எரியும்.
சர்க்கரை ஃப்ரெஷ்ஷாக இருக்க..
சர்க்கரை மழைக்காலங்களில் தண்ணீர் விட்டு ஒரு மாதிரியான வாடை வர ஆரம்பித்து விடும். இதை தவிர்க்க நாம் சர்க்கரை பாத்திரத்தினுள் ஒரு தேங்காய் ஓட்டை போட்டு வைக்கலாம். இந்த தேங்காய் ஓடு சர்க்கரையினுள் லேசாக புதைந்ததுபோல் இருக்க வேண்டும். இப்படி வைத்தால் சர்க்கரை தண்ணீர் விடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
டீ சுவை அதிகரிக்க
டீ சுவையாகவும் நல்ல வாசமாகவும் இருக்க இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. 250 கிராம் டீ தூளில், சுக்கை மிக்ஸி ஜாரில் அரைத்து பொடித்து அதில் ஒரு ஸ்பூன் அளவை டீ தூளில் சேர்க்கவும். மேலும் பொடித்த ஏலக்காயை அரை ஸ்பூன் அளவு அதே டீத்தூளில் சேர்த்து அனைத்து ஒன்றோடு ஒன்று கலக்குமாறு நன்கு கலந்து விட வேண்டும். இப்போது இந்த டீத்தூளை கொண்டு டீ போட்டு பாருங்கள்.. டீ சூப்பரா இருக்கும். டீ தூள் அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு சுக்கு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளலாம்.
காய்ந்த திராட்சை ஃப்ரெஷ்ஷாக இருக்க
திராட்சை பிசு பிசிவென்று ஒட்டாமலும், கட்டிப்படாமல் இருக்கவும் திராட்சை வைத்திருக்கும் டப்பாவிற்குள் கால் ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு குலுக்கிவிட வேண்டும். அரிசி மாவு அனைத்து திராட்சை மீதும் படும்படி குலுக்கி விட வேண்டும். இதை அப்படியே மூடி வைத்துவிடலாம்.
மேலும் படிக்க
வீட்டில் எறும்பு வராமலிருக்க! தண்ணீர் கேனில் துர்நாற்றம் வீசாமல் இருக்க! இதை மட்டும் பண்ணுங்க
Ayurveda Tips: உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஓமம் தண்ணீர் - என்னென்ன?