மேலும் அறிய

Ayurveda Tips: உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஓமம் தண்ணீர் - என்னென்ன?

ஜீரணக் கோளாறு ,வயிற்று வலி, வயிற்றுப் பொருமல்,  போன்றவற்றுக்கு ஒரு அருமருந்து தான் இந்த ஓமம்.

பொதுவாக மசாலா பொருட்கள் என்பது உடல் நோய்களுக்கு இன்றியமையாத மருத்துவ பொருட்களாக உள்ளன. ஜீரணக் கோளாறு ,வயிற்று வலி, வயிற்றுப் பொருமல்,  போன்றவற்றுக்கு ஒரு அருமருந்து தான் இந்த ஓமம். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து   அருந்தி வந்தால் இந்த குறிப்பிட்ட நோய்கள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

வலி நிவாரணியாகவும் ,பசியை தூண்டும் ஒரு பொருளாகவும் உள்ள இந்த ஓமம் , சைனஸ், சளி தொந்தரவு ,மூக்கடைப்பு போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. மருத்துவ குணம் நிரம்ப பெற்ற இந்த ஓமமானது, இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு மூலிகைச் செடி வகையாகும். ஓமம் சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  

இரும்புச்சத்து,கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், தையாமின், ரிபோபுளேவின் ,நியாசின் போன்ற ஏராளமான சத்துக்கள் ஓமத்தில் அடங்கியுள்ளன. குரல்வளை மற்றும் நுரையீரலில் நோய் தொற்றுகள் அண்டாமலும் , நரம்புகள் ஏற்படும் அடைப்புகளை சரி செய்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

காலம் காலமாக இந்த ஓமம் வீடுகளில் மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
ஒரு ஆரோக்கியமான காலைப் பொழுதை தொடங்க வேண்டுமானால் தேநீருக்கு  பதிலாக இந்த ஓமம் கலந்த தண்ணீர் மிகவும் சிறந்த பானமாகும்.

ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ள இந்த ஓமத்தில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், ஈரப்பதம், சபோனின்கள், ஃபிளேவோன்கள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோபால்ட், தாமிரம், அயோடின், மாங்கனீசு, தயாமின் மற்றும் ரைபோஃப்ளேவின் , ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் காணப்படுவதாக மருத்துவ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

ஓமம் விதைகளில் தைமோல் எனப்படும் இயற்கையான எண்ணெய் தன்மை உள்ளது. இதுதான் ஓமத்தில் இருந்து வரும் நறுமணத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓமம் மிகவும் வாசனை கொண்டதாகவும், ஓரளவு கசப்புத் தன்மையை கொண்டிருப்பதாலும் அசைவ உணவுகள், கார வகைகள் மற்றும் ஊறுகாய்களை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஓமத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் எவை என பார்க்கலாம்:
  
 குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது:

இந்திய உணவு வகைகளில், ஓமத்திற்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. வயிற்றில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த ஓமத் தண்ணீர் விளங்குகிறது. ஓமத்தை விட ஓமம் கலந்த தண்ணீர், உடலுக்கு அதிகளவில் நன்மைகளை தருகிறது. வயிற்று வலி அல்லது வயிற்றில் பிடிப்பு ஏற்பட்டால் தினமும் இந்த ஓமத் நீரை குடித்து வர அவை சீராகிவிடும். மேலும் வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளையும் இந்த ஓமத் தண்ணீர் சரி செய்கிறது. குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை இந்த ஓம விதைகளில் இருப்பதாக கூறப்படுகிறது. 

 
தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது:

ஓமத்தில் கிருமி நாசினி, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் இது இருமல், சளி, காது தொற்றுகள் மற்றும் வாய் தொற்றுகளை குணப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்களில் ஏற்படும் தொற்று நோய்களுக்கும் இந்த ஓமத் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது என சொல்லப்படுகிறது.

ஓமம் விதைகளில் அதிகளவில் பாக்டீரியாக்கள் மற்றும் ஆன்டி  பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் உள்ளன. ஓமம் விதைகளில் உள்ள தைமோல் எனும் இயற்கை எண்ணெய் தேவையில்லாத பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 சுவாச பிரச்சனைகளை சரி செய்கிறது:

ஓமத்தண்ணீர்  நுரையீரல் மற்றும் குரல்வளையை ஆரோக்கியமாக வைத்து, அடைப்புகளை சரி செய்கிறது. இது மூச்சுக்குழாய் அழற்சி,  ஆஸ்துமாவால் நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக இந்த ஓமம் பயன்படுகிறது.  ஆஸ்துமா நோயாளிகளின் சுவாச பாதைகளை தளர்த்தி  எளிதாக சுவாசிக்க உதவுகிறது.

எடை இழப்பிற்கு  உதவுகிறது:

இந்த ஓமமானது உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முக்கியமாக, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. இது உடல் பருமன் ‍, நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்றன ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஓமம் கலந்த தண்ணீரை தினமும் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்  இதய ஆரோக்கியம் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்படும்.

வலி நிவாரணியாக  செயல்படும் ஓமம்:

முடக்கு வாதம் (RA) உள்ள நபர்கள் இந்த ஓமத் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால்  வலி மற்றும் அதன் பாரத் தன்மையை சிறப்பாக சமாளிக்க முடியும் என கால்களில் மூட்டு வலி உள்ள இடத்தில், ஓமம் விதை பேஸ்ட்டை தடவலாம் அல்லது ஓமம் விதைகள் கலந்த சூடான நீரில் மூட்டுகளை கழுவி வரலாம்.

பல், காது வலி என பல்வேறு உடல் வலிகளில் இருந்து ஓமம் எண்ணெய் பாதுகாக்கிறது. வெதுவெதுப்பான நீரில், ஓமம் விதைகள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால், பல்வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

​பெண்களுக்கு சிறந்த பலன் தரும் ஓமம்:

பெண்களின் கருப்பை மற்றும்  மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்க ஓமம் உதவுகிறது. பிரசவ காலத்தில், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் செரிமான பிரச்சினைகளை போக்க ஓமத் தண்ணீர் பெரிதும் உதவுகிறது. அதேபோல் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான ஒவ்வாமைக்கு   தினமும் சிறிதளவு ஓமத்தண்ணீரை குடிக்க கொடுத்து வந்தால், வயிற்றில் வாயுத்தொல்லையை  தடுத்து சீராக்கும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs SA Test: வரலாறு காணாத மாபெரும் தோல்வி - 140 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த தெ.ஆ.,
IND Vs SA Test: வரலாறு காணாத மாபெரும் தோல்வி - 140 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த தெ.ஆ.,
Sengottaiyan: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
Gold Rate Nov.26th: இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA Test: வரலாறு காணாத மாபெரும் தோல்வி - 140 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த தெ.ஆ.,
IND Vs SA Test: வரலாறு காணாத மாபெரும் தோல்வி - 140 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த தெ.ஆ.,
Sengottaiyan: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
Gold Rate Nov.26th: இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
Cyclone Senyar: உருவான ‘சென்யார்‘ புயல்; தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்கா.? வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன.?
உருவான ‘சென்யார்‘ புயல்; தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்கா.? வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன.?
IND Vs SA Test: சொந்த காசில் சூனியம்.. ஸ்பின் ஆட தெரியாமல் முழிக்கும் இந்திய அணி, உள்ளூரில் பெரிய அவமானம்
IND Vs SA Test: சொந்த காசில் சூனியம்.. ஸ்பின் ஆட தெரியாமல் முழிக்கும் இந்திய அணி, உள்ளூரில் பெரிய அவமானம்
Top 10 News Headlines: புதுச்சேரி செல்லும் விஜய், உருவான சென்யார் புயல், ஐ.நா வெளியிட்ட திடுக்கிடும் அறிக்கை - 11 மணி செய்திகள்
புதுச்சேரி செல்லும் விஜய், உருவான சென்யார் புயல், ஐ.நா வெளியிட்ட திடுக்கிடும் அறிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget