குழந்தைக்கு உணவு அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்
ஆறு மாதத்திற்கு பிறகு மற்ற உணவுகளை ஊட்ட தொடங்கலாம். அரிசி கஞ்சி , கேழ்வரகு கஞ்சி ,பழங்கள், வேகவைத்த காய்கள் என ஒவ்வொன்றாக கொடுத்து பழக்கலாம். ஒரு வயது வரை தாய் பாலும் கொடுக்க வேண்டும்.
குழந்தை பிறகு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைத்து விடும். ஆறு மாதத்திற்கு பிறகு மற்ற உணவுகளை ஊட்ட தொடங்கலாம். அரிசி கஞ்சி , கேழ்வரகு கஞ்சி ,பழங்கள், வேகவைத்த காய்கள் என ஒவ்வொன்றாக கொடுத்து பழக்கலாம். ஒரு வயது வரை தாய் பாலும் கொடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு வயதுக்குள் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மாட்டுப்பால் - இதில் இருக்கும் புரதங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக செரிமானம் ஆகாமல், செரிமான பிரச்சனை வரும். இரும்பு சத்து குறைபாடு வரும். குழந்தைக்கு வறட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
உப்பு - குழந்தைகளுக்கு சுவை, அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. அதனால் உப்பு, இனிப்பு போன்ற சுவைகள் குழந்தைகளுக்கு முழுமையாக தெரியாது. குழந்தைக்கு தேவையான சோடியம் சத்து தாய்ப்பாலில் இருந்து கிடைத்து விடும். மேலும் பார்முலா பாலில் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடும். உணவில் நீங்கள் உப்பு சேர்த்து கொடுத்தால் குழந்தையின் உடலில் அதிகம் உப்பு சேர ஆரம்பித்து விடும். அதனால் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படலாம்.
ரீபைண்ட் சர்க்கரை - இதை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது. இது உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். நீரிழிவு நோய், உடல் பருமன், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும். பழங்களில் இருந்து கிடைக்கும் இயற்கையான இனிப்பு சுவை குழந்தைகளுக்கு போதுமானது.
இறால் நண்டு போன்ற கடல் உணவுகள் தாய்க்கோ, குடும்பத்தில் யாருக்கேனும் ஒவ்வாமை பிரச்சனைகள் இருந்தால் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. இதனால் குழந்தைக்கும் ஒவ்வாமை பிரச்சனை வரலாம். அதுவும் ஒரு வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைக்கு தரவே கூடாது. இது ஒவ்வாமை பிரச்சனைகளை தீவிர படுத்தும்.
காபி, டீ - இதில் இருக்கும் காபின் ஆனது குழந்தைக்கு மூச்சு திணறல், வாந்தி, வயிற்று போக்கு, சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் ஒரு வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைக்கு கட்டாயம் தர கூடாது.
குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு உணவும் ஆரோக்கியமானதாகவும், குழந்தைகள் வளர்ச்சிக்கு உதவியாகவும் இருக்க வேண்டும். மசாலா குறைத்து, சமைத்து கொடுக்கலாம். வீட்டில் சமைத்த உணவுகளை அறிமுக படுத்துவது மிகவும் நல்லது
தண்ணீர் கொடுக்கும் போதும் கவனம் வேண்டும். அதிகமாக தண்ணீரை குடித்து விட்டு உணவுகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். அளவான தண்ணீர் கொடுத்தாலே போதுமானது