சிப்ஸ், குளிர்பானங்கள் அதிகமாக சாப்பிடுபவரா? இதய நோய் ஏற்படும் அபாயம் - எச்சரிக்கும் ஆய்வு!
பதப்படுத்தப்படும் உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கே காணலாம்.
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Harvard T H Chan School of Public Health மேற்கொண்டுள்ள ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் குடிப்பது தீவிர இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாசன்ட் ரீஜினல் ஜெல்த் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், ultra-processed உணவுகளை (UPF) சாப்பிடுவது Coronary heart disease (CHD), cardiovascular disease (CVD), மற்றும் ஸ்டோக் உள்ளிட்ட தீவிர நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு சுமார் 2 லட்சம் பேரின் வாழ்வியல் முறை, உண்ணும் உணவுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களில் 57 சதவீதம் நபர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அடல்ட் டயட்டில் அதிக கலோரி, அதிகமாக சர்க்கரை, சோடியம், ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்ததாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். பாக்கெட்களில் விற்கப்படும் உணவு வகைகளில் சுவைக்காகவும் உணவுப் பொருள் நீண்டகாலம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சர்க்கரை, சோடியம் நிறைந்த கெமிக்கல் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எமுல்சிஃபையர் என்றழைக்கப்படுகிறது.
இந்த ஆய்வில் பிரெட், சீரியல், கோதுமை பிரெட், சாஸ் வகைகள், பீனட் பட்டர், மயோனஸ் உள்ளிட்ட ஸ்ப்ரெட் வகைகள், குளிர்பானங்கள், சிப்ஸ் வகைகள், ப்ராசஸ் செய்யப்பட்ட இறைச்சி வகைகள், மீன், Ready to Eat வகை உணவுகள், யோகர்ட் என வகை பிரித்து அதை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று கண்டறிய முயற்சித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
பிரெட், சீரியல்ஸ், சர்க்கரை நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகள், ஃப்ளேவர்டு யோகர்ட், சமைக்காமல் அப்படியே உண்ண கூடிய உணவுகள் ஆகியவற்றை அடிக்கடி, தொடர்ச்சியாக சாப்பிடுவதால் இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது.
இதில் சில சீரியல் வகைகள், கோதுமை பிரெட், யோகர்ட் உள்ளிட்டவைகள் குறைந்த அபாயம் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பாக காலை உணவில் சர்க்கரை, இனிப்பு அதிகமாக கொண்ட உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. காலை உணவில் பழ ஜூஸ் குடிப்பதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக காலை உணவு முடிந்து 2 மணி நேரம் கழித்து ப்ரேட் நேரத்தில் பழ ஜூஸ் குடிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏபிபி நாடு ஏற்காது.