மேலும் அறிய

Spicy Oats Pancake Recipe: ருசியான காலை உணவு; ஓட்ஸ் Pancake ரெசிபி - இதோ!

Spicy Oats Pancake Recipe: ஓட்ஸ் Pancake செய்வது எப்படி என காணலாம்.

பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகள் லிஸ்டில் ஓட்ஸ் இருக்கும். டயட், உடல் எடை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களுக்கும் ஓடஸ் சிறந்த தேர்வாக இருக்கிறது. ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் ஸ்மூத்தி அதோடு ஓட்ஸ் Pancake ருசியாக இருக்கும்.

ஓட்ஸ் Pancake

என்னென்ன தேவை?

ஓட்ஸ் - ஒரு கப்

கோதுமை மாவு - அரை கப்

மோர் அல்லது பால் - ஒரு கப்

முட்டை - 1

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

துருவிய கேரட் - அரை கப்

பொடியாக நறுக்கிய குடை மிளகாய - அரை கப்

உப்பு - தேவையான அளவு

சீரக தூள் - அரை டீ ஸ்பூன்

மிளகாய தூள் - ஒரு டீ ஸ்பூன்

வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை

ஓட்ஸை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, முட்டை சீரக தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், துருவிய கேரட், மிளகாய் பொடி, உப்பு அனைத்தையும் போட்டு ஒன்றாக கலக்கவும். இதோடு தேவையான அளவு பால் அல்லது தயர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.

அடுப்பில்  மிதமான தீயில் வைத்து தோசைக் கல் சூடானதும் மாவில் சிறதளவை எடுத்து தடிமனான தோசை போல ஊற்ற வேண்டும். வெண்ணெய் / நெய் சேர்த்து கொள்ளலாம். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சாப்பிடலாம்.  ஓட்ஸ் Pancake ரெடி. இதையே இனிப்பாக வேண்டுமென்றால் ஓட்ஸ், முட்டை, தேன், வாழைப்பழம், பால் சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றி எடுத்தால் ஸ்வீட் ஓட்ஸ் Pancake ரெடி. 

பிரெட்  Pancake

என்னென்ன தேவை?

பிரெட் துண்டுகள் - 6

முட்டை - 3

பால் - 2 கப்

வாழைப்பழம் - 1

உப்பு - தேவையான அளவு

தேன் - தேவையான அளவு

வெண்ணெய்/ நெய்/ ஆலிவ் ஆயில் - தேவையான அளவு

செய்முறை

பிரெட் துண்டுகளை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, வாழைப்பழம், பால், தேன், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக் கல் சூடானதும் அதில் மாவு கலவையை எடுத்து ஊற்றி, வெண்ணெய் சேர்த்து நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான பிரெட்  Pancake ரெடி. சாக்லெட் சிரப் சேர்த்து சாப்பிடலாம். 

தேங்காய் ஓட்ஸ்:

 rolled oats-ஐக் கொண்டு தேங்காய் மற்றும் மசாலாப்பொருள்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய துரித காலை உணவு தான் தேங்காய் ஓட்ஸ். தயிருடன் சேர்ந்து இதனைச் சாப்பிடலாம்.

ஓட்ஸ் முட்டை ஆம்லெட்: 

காலை உணவிற்கு முட்டை ஆம்லெட்டுகளை  வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். இதே போன்று ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் ஊத்தாப்பம், ஓவர்நைட் ஓட்ஸ், காய்கறி ஓட்ஸ் கஞ்சி,  உலர்ந்த பழங்கள் கொண்ட ஓட்ஸ் கஞ்சி, சாக்லேட் ஓட்ஸ், ஓட்ஸ் கீர் அல்லது ஓட்ஸ் பாயாசம் போன்ற பல்வேறு ரெசிபிகளை காலை உணவாக செய்யலாம்.

ஓட்ஸ் நல்லதா?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் ஆரோக்கியமானதா? நீரிழிவு நோய்க்கு ஓட்ஸை உண்பது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஓட்ஸ் முக்கியமாக உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், "ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இந்த கரையக்கூடிய நார்ச்சத்துகள் குடலில் உணவின் போக்குவரத்து நேரத்தை அதிகரிக்கவும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைக்கவும் உதவுகின்றன." என்கின்றனர்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget