தோல் வறட்சியாக இருந்தால் இதை செய்தால் போதும்.. இந்தாங்க நச் டிப்ஸ்!
தேன் , பால், ஓட்ஸ் , மற்றும் அவோகேடா பழத்தை வைத்து ஈசியாக முகத்தை பளபளப்பாக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு சருமம் இருக்கும். அதாவது, சிலருக்கு எண்ணெய் பசை அதிகமாக இருக்கும், சிலருக்கு உலர் சருமமாக இருக்கும், சிலருக்கு உணர்வுத்திறன் மிக்க சருமமாக இருக்கும். இது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு கால நிலைக்கு தகுந்தாற் போல், மாறுபடும். அனைத்திற்கு உடனே மருத்துவரை அணுக முடியாது. அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளியில் செல்வதே கஷ்டமாக இருக்கும் போது, இது போன்ற காரணங்களுக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது பெரும்பாடாக இருக்கும். அதற்கு மாற்றாக சமையலறையில் தோல் பராமரிப்புக்கு தேவையான அனைத்தும் இருக்கும். இந்த புதையலில் நமக்கு பிடித்தவற்றை தேடி கண்டுபிடித்து கொள்வோம்.
தோல் பராமரிப்புக்கு , தோல் சிகிச்சை நிபுணர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் எளிமையான முறையில் முகத்தை பராமரிக்க நிறைய டிப்ஸ் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வரிசையில்
View this post on Instagram
பிரபல தோல் மருத்துவரான டாக்டர் சிட்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஆகா வெறும் 30 வினாடிகளில் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு வறண்ட சருமத்தை புத்துணர்ச்சியாக மாறுவதற்கு என்ன செய்யலாம் வீடியோ ஆக பகிர்ந்து கொண்டுள்ளார். இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து செல்கிறது.
வீடு சமையலறையில் கிடைக்கும், பொருள்களை கொண்டு ஈசியா செய்யலாம் வாங்க. பால், ஓட்ஸ், தேன், அவோகாடா பழம் போதுமானது . ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பால் , அரை அவோகாடா பழம், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வைத்து இருந்துவிட்டு முகத்தை கழுவி விடலாம். இது ஊட்டச்சத்துகள் நிறைந்த பேஸ்பேக் ஆகும்.
இதில் சேர்க்கும் ஒவ்வொன்றிலும் ஒரு வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், தோலின் ஆரோக்கியம் மேம்படும். அவோகேடா பழத்தில் வைட்டமின் E சத்து நிறைந்து இருப்பதால்,இது தோலை மிருதுவாக்குகிறது. தேன் தோலின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது.பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது வீக்கத்தை குறைகிறது. ஓட்ஸ் வீக்கத்தை குறைத்து தோலை பொலிவாக வைக்கும். அவோகேடா பழம் கிடைக்க வில்லை என்றால் அவோகேடா எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம்.
வைட்டமின் ஈ மற்றும் ஹைலூரோனிக் அமிலம் நிறைந்த மாய்ஸசரைசர் தோல் வறட்சி இல்லாமல் பாதுகாக்கும்.