Natural Hair Conditioner :கூந்தலை பளபளப்பாக வைத்திருக்க ஆசையா? அப்போ இந்த இயற்கை ஹேர் கண்டிஷனரை ட்ரை பண்ணி பாருங்க...
இயற்கையான ஹேர் கண்டிஷனரை பயன்படுத்தி கூந்தலை பளபளப்பாக வைத்திருக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
அழகான, பளபளப்பான தலைமுடியை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா என்ன? ஆனால் ஒரு சில ரசாயனங்கள் அதிகம் கலக்கப்பட்ட கண்டிஷனரை பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் சேதமடைவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே ரசாயனங்கள் குறைவாக உள்ள கண்டிஷனர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
குறைந்த அளவு ரசாயனம் நிறைந்த கண்டிஷனரை கண்டுபிடிப்பது சற்று சவாலாக இருந்தால் கவலை வேண்டாம். நீங்கள் இயற்கையான முறையில் கண்டிஷனரை தயாரித்து பயன்படுத்தலாம். இவ்வாறு இயற்கை கண்டிஷனரை பயன்படுத்துவது தலைமுடிக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும். இயற்கை கண்டிஷனர் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் கூந்தலை வலிமையாக மாற்றும் என சொல்லப்படுகிறது.
1.ஆப்பிள் சீடர் எனப்படும் வினிகர், ஒரே சமயத்தில் தலைமுடியை சுத்தம் செய்வது மட்டுமல்லாது, pH அளவையும் சமப்படுத்துவதாக கூறப்படுகிறது. இது ஒரு நல்ல ஹேர் கண்டிஷனர் ஆகும். 2 கப் தண்ணீருடன் வினிகர் சேர்த்து தலை முடியில் தடவி 2 ஊறவிடுங்கள். தலை5 நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும். இதை தலையில் தடவிய பின்பு 5 முறை விரல்களால் கோதி விட வேண்டும். பின்பு குளிர்ச்சியான தண்ணீரை கொண்டு தலைமுடியை அலச வேண்டும். இது முடியை கண்டிஷனிங் செய்வது மட்டுமில்லாமல், தலையில் போகாமல் இருக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை நீக்கிவிடும் என சொல்லப்படுகிறது.
2. அவகேடா பழம் தலைமுடிக்கு மிகச்சிறந்தது. அவேகேடாவை நன்றாக மசித்து, தேங்காய் பால் மற்றும் ஆலிவ் ஆயிலுடன் கண்டிஸ்னர் பதத்தில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பிரிட்ஜில் வைத்து, ஒவ்வொரு முறையும் கண்டிஸ்னராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. சோற்றுக்கற்றாழை கண்டிஷனர்
சோற்றுக்கற்றாழை - 4 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கூந்தலை உலரவிட்டு பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு அலச வேண்டும். சோற்று கற்றாழை முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. மேலும் இது கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இது பி.ஹெச் அளவை மீட்டெடுக்க உதவும் எனவும் சொல்லப்படுகின்றது.
4.செம்பருத்தி, வெந்தயம், பூலாங்கிழங்கு, எலுமிச்சை பழத் தோல், பச்சை பயறு, ஆவாரம் பூ ஆகியவற்றை சீயக்காயுடன் கலந்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, இந்தப் பொடியை பயன்படுத்தி குளித்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும். சீயக்காய், எண்ணெய்ப் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்கும் தன்மை கொண்டது. அதே நேரம் தேவையான எண்ணெய்ப் பசையை போக்கி இயற்கையான ஒரு கண்டிஷனராகவும் இது செயல்படும். சீயக்காய் பயன்படுத்திய பின்பு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும் படிக்க
NEET: நீட் தேர்வால் பயனில்லை என ஒப்புக்கொண்டது மத்திய அரசு... முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்