முல்தானி மெட்டியைப் பயன்படுத்தி இந்த பேஸ்பேக்கை டிரை பண்ணி பாருங்க... சும்மா... தகதகனு மின்னுவீங்க!
முல்தானி மெட்டியுடன், தேன், தேங்காய் பால், கேரட், முட்டைவெள்ளை கரு,பப்பாளி, சந்தனப்பவுடர் ஆகியவற்றைச்சேர்த்து வீட்டிலேயே நாம் பேசியல் மேற்கொள்ளலாம். இதன் மூலம் முகப்பொலிவை நாம் எளிதாகப் பெற முடியும்.
முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று அதிக அளவு பணத்தினைக்கொண்டு பேசியல் செய்வது என்பது அனைவராலும் முடியாத ஒன்று. இந்நிலையில் பலர் வீடுகளிலேயே சருமத்தைப்பராமரிக்க மஞ்சள், சந்தனம் போன்றவற்றைப் பயன்படுத்தி பேசியல் செய்துவருகின்றனர். இதோடு பலர் முல்தானி மெட்டிகளையும் தற்போது சருமப்பராமரிப்பிற்காகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இது சருமத்தில் வடியும் எண்ணெய் பிசுபிசுவை நீக்கி தெளிவான முகத்தோற்றத்தை அளிக்கவும், பருக்கள், சருமச் சேதம் போன்றவை வராமல் முல்தானி மெட்டி பாதுகாக்கிறது. மேலும் வெயிலின் காரணமாக ஏற்பட்டுள்ள சருமத்தில் எற்பட்ட கருவளையம், அழுக்கு மற்றும் இறந்தச் செல்களையும் இது சுத்தம் செய்ய உதவியாக உள்ளது. இந்நிலையில் இந்த முல்தானி மெட்டியை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும் என்று இங்கே அறிந்துக்கொள்வோம்…
முல்தானி மெட்டியை நம்முடைய முகப்பராமரிப்பிற்காக எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, நாம் இதன் வரலாற்றைச் சற்றுத் தெரிந்துக்கொள்வோமா?.. 18 நூற்றாண்டில் முல்தான் நகரத்திலிருந்து சுண்ணாம்பு களிமண் பொம்மை ஒன்று பிரித்தெடுக்கப்பட்டதாம். இது பழைய நினைவுச்சின்னங்களை மிக அற்புதமாக சுத்தம் செய்தமையைப் பார்த்து மக்கள் வியந்து ஆச்சரியப்பட்டார்களாம். இதனையடுத்து இந்த களிமண்ணைக்கொண்டு பழைய முல்தான் நகரில் உள்ள சின்னங்களையெல்லாம் சுத்தம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்நகரின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. முதலில் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி வந்த நிலையில், பின்னர் சருமத்தைக்குளிர்விப்பதற்கும், முகப்பளபளப்பிற்கும் உதவியாக உள்ளது. இதில் சருமப்பராமரிப்பு மூலப்பொருள்களான அலுமினிய சிலிக்கேட் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், இது சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இத்தயை சிறப்புவாய்ந்த இந்த முல்தானி மெட்டி பேசியல் பேக், எண்ணெய் பிசுபிவை நீக்கவும், கரும்புள்ளிகளை அகற்றவும், முகப்பருக்கள் நீக்குவதற்கு போன்றவற்றிற்கு உதவியாக உள்ளது.
எண்ணெய் சருமத்திற்கு முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்: முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து, ஒரு மென்மையான பேஸ்ட் போல் தயாரிக்க வேண்டும். பின்னர் இதனை முகம் மற்றும் கழுத்து வரை தடவி சுமார் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்த்த நீர் அல்லது சாதாரண நீரில் முகத்தினை கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது, முகத்தில் எண்ணெய் பிசுபிசு இல்லாத சருமத்தை நம்மால் பெற முடியும். மேலும் ரோஸ் வாட்டர் மாஸ்க் சருமத்துடன் PH அளவை சமன் செய்ய உதவுவதோடு, முகத்தின் வெளிப்புறத்தில் உள்ள இறந்த சருமத்தை நீக்கி, எண்ணெய் இல்லாத மற்றும் ஒளிரும் சருமத்தை நமக்கு கிடைக்க உதவுகிறது.
மென்மையான சருமத்திற்கு பாதம் மற்றும் பாலுடன் முல்தானி மெட்டி பேஸ்பேக்: முல்தானி மெட்டியுடன் அரைத்த பாதாம் மற்றும் சிறிதளவு பால் சேர்ந்து பேஸ்பேக் போன்று தயார் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு நிமிடத்திற்குப் பிறகு முகத்தில் முழுவதும் தடவியபின்பாக, ஒரு 10 நிமிடங்களுக்கு பிறகு அதனை கடற்பாசி அல்லது குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவிக்கொள்ளவேண்டு்ம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளும் போது பாதம் மற்றும் பாலில் உள்ள சத்துக்களால் சருமத்தை மென்மையாகவும் மாற உதவுகிறது. எனவே முகம் எப்பொழுதும் வறட்சியாக உள்ளது என்று இனி கவலைப்பட வேண்டாம். இந்த பேஸ்பேக் மட்டுமே நமக்கு போதும்.
தக்காளி ஜூசுடன் முல்தானி மெட்டி: தக்காளி ஜூசுடன் முல்தானி மெட்டியைப்பயன்படுத்தும்போது, சரும பராமரிப்பிற்கும், முகப் புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. எனவே முல்தானி மெட்டி,தக்காளி ஜுஸ் மற்றும் மஞ்சள் சேர்த்து பேஸ் பேக்உபயோகிக்கலாம்.
இதேப்போன்று முல்தானி மெட்டியுடன், தேன், தேங்காய் பால், கேரட், முட்டைவெள்ளை கரு,பப்பாளி, சந்தனப்பவுடர் ஆகியவற்றைச்சேர்த்து வீட்டிலேயே நாம் பேசியல் மேற்கொள்ளலாம். இதன் மூலம் முகப்பொலிவை நாம் எளிதாகப் பெற முடியும்.