என்னது மாடு மெத்தையிலதான் தூங்குமா...அம்பானி வீட்டுக்கு பால் கொடுக்கும் மாட்டில் என்ன ஸ்பெஷல்?
முகேஷ் அம்பானி குடும்பத்தினர் நெதர்லாந்து நாட்டைப் பூர்வீகமாக கொண்ட holstein friesian இன மாட்டுப்பால் மட்டுமே உட்கொள்வார்கள்
முகேஷ் அம்பானி
இந்தியா மற்றும் ஆசியாவின் பணக்கார மனிதர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான இவரது மகன் அனந்த் அம்பானியின் திருமணம் இந்த ஆண்டு அதி பிரம்மாண்டமாக நடந்து உலகத்தினரை திரும்பி பார்க்க வைத்தது.
கடந்த ஜூலை 12 முதல் 14 வரை கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இந்த திருமணம் அம்பானியின் குடும்பத்திற்கு சொந்தமான ஜியோ வர்த்தக மையத்தில் மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப் பட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், ஹாலிவுட் மாடல் கிம் கார்தர்ஷியன், ஜான் சீனா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்திய திரையுலக பிரபலங்கள் அமிதாப் பச்சன் , ரஜினிகாந்த் , ரன்வீர் சிங் , விக்கி கெளஷல், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் ஆலியா பட், ஷாருக் கான், சல்மான் கான், ஜான்வி கபூர், ஏ.ஆர் ரஹ்மான் என இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.
மூன்று நாட்கள் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்திற்கு அம்பானி குடும்பத்தினர் சுமார் 5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 9000 விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
மெத்தையில் உறங்கும் மாடுகள்
சாப்பிடும் உணவில் இருந்து ஆடை என அனைத்திலும் தங்கள் கெளரவத்தை வெளிப்படுத்தி வரும் அம்பானி குடும்பத்தைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அம்பானி வீட்டினர் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இன மாடு கறக்கும் பாலை மட்டுமே உட்கொள்கிறார்கள். நெதர்லாந்து நாட்டைப் பூர்வீகமாக கொண்ட holstein friesian இன மாட்டின் பாலை மட்டுமே அம்பானி குடும்பத்தினர் பயண்படுத்துகிறார்களாம். புனேவில் சுமார் 35 ஏக்கரில் அமைந்துள்ள பாக்யலட்சுமி பண்ணையில் இருந்து இந்த பால் அம்பானி குடும்பத்திற்கு செல்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 25 லிட்டர் வரை பால் கறக்கக்கூடிய இந்த holstein friesian இன மாடு ஆர்.ஓ தண்ணீர் மட்டும்தான் குடிக்குமாம். மேலும் ரப்பரால் ஆன ஒரு சிறப்பு மெத்தையில் தான் இந்த மாடும் தூங்கும். இந்த இன மாட்டின் பாலில் அதிகப்படியான ஊட்டச்சத்து இருப்பதாகவும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு ஊட்டச்சத்து நிபூனர்கள் இந்த மாட்டுப் பாலை பரிந்துரைப்பது வழக்கம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )