Parenting: குழந்தை பிறந்ததும் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ டிப்ரெஷனா? கொஞ்சம் பதறாம இதை படிங்க..
Parenting:மனதை வருத்தி கொள்ளாமல் பக்குவத்துடன் செயல்பட்டால் குழந்தை வளர்ப்பு ஒரு கலையாக மாறிவிடும்.
குழந்தை வளர்ப்பில் தாய் தந்தை இருவருக்குமே சம அளவு பங்கு இருகின்றது. ஒரு குழந்தையை வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அன்றாடம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் என்றால் அவர்களின் சுமை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.
வேலை பளு, மன சோர்வு, ஆரோக்கிய பிரச்சனைகள், வீட்டு பராமரிப்பு என பல வேலைகளை எடுக்கும்போது பல சிக்கல்கள், தாமதங்கள் ஏற்படுகின்றன. இன்றைய லைப் ஸ்டைல் மாற்றங்களும் பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையையும், அலுவலகத்தையும் சமநிலையில் வைத்துக்கொள்வது ஒரு பெரிய சவால். பெற்றோர் இருவருமே பல ஏற்ற தாழ்வுகளை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம்.
இன்று ஆன்லைனில் பல தொகுப்புகள், புத்தகங்கள், வீடியோக்கள் குழந்தை வளர்ப்பை குறித்து பகிரப்பட்டாலும் தங்களுடைய சொந்த அனுபவங்களே இங்கு முக்கிய பங்கு வகின்றன. குழந்தை வளர்ப்பில் சிக்கலை சந்திப்பது சாமானியர்கள் மட்டுமல்ல பல பிரபலங்களும்தான். பெற்றோர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவர சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
போஸ்ட்பார்டம் டிப்ரெஷன் :
மகப்பேறு காலத்திற்கு பிறகு ஏற்படும் மனசோர்வு போஸ்ட்பார்டம் டிப்ரெஷன் எனப்படும். கர்ப்பகாலம் முதல் பிரசவம் வரையிலும் பின்னர் குழந்தையை கையாளும்போதும் பெண்களுக்கு மனசோர்வு ஏற்படும். இதனால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த மன அழுத்தம் இருவருக்கும் ஏற்படுவது இயல்பானது.
பிரசவ வலி, அறுவை சிகிச்சை, பிரசவத்தில் ஏற்படும் சிக்கல் போன்ற பல உணர்ச்சிகள் பெண்களுக்கு மகப்பேறுக்கு பிறகு மனசோர்வை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் இதில் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றாலும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், பொறுப்புகள், தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் அவர்களும் இந்த மனசோர்விற்கு ஆளாகின்றனர். இது ஒன்று அல்லது இரு மாதங்களில் சீரான நிலைக்கு மாறிவிடும். அது மேலும் தொடருமாயின் ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.
பேலன்ஸிங்:
குடும்பம், அலுவுலகம் இரண்டையும் சமநிலை படுத்த கற்று கொள்ள வேண்டும். உங்களுடைய குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் இனிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது அலுவலக பணிகளை ஒத்திவைத்து விட்டு குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் மனசோர்வு சீர் செய்யப்படும்.
குடும்பம், குழந்தைகள், வேலை அனைத்துமே ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். ஆனால் அவை அனைத்தையும் சமநிலையில் பார்க்கும் பக்குவத்தை கற்றுக்கொள்வது அவசியம். மனதை வருத்தி கொள்ளாமல் பக்குவத்துடன் செயல்பட்டால் குழந்தை வளர்ப்பு ஒரு கலையாக மாறிவிடும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்