தொடர்ந்து நாவல் பழம் சாப்பிடுங்கள்.. சர்க்கரை நோயைக்கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என ஆய்வில் தகவல்!
நாவல் மரத்தின் இலை,விதை, பட்டை மற்றும் பழம் அனைத்திலும் மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளது. இப்பழத்தின் கொட்டையைக்கூட பொடியாக்கி சாப்பிட்டுவந்தால் நீரழிவு நோய் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து நாவல் பழத்தைச்சாப்பிட்டுவரும் போது, இன்சுலின் அளவைக்குறையும் என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்ப வாழ்க்கை முறைகளை மக்கள் மாற்றிக்கொண்டதன் விளைவு தான், தற்போது பெரும்பாலான மக்கள் பல்வேறு நோயுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இளம் வயதினர் முதல் பெரியவர்களை வரை சந்திக்கும் பிரச்சனை நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய் தான். இது உடலில் இன்சுலின் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலையைக்குறிக்கும் நோயாக உள்ளது.
நீரழிவு நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், விருப்பப்படும் எவ்வித உணவுகளை சாப்பிட முடியாது. முறையாக டயட் இருந்தால் மட்டுமே இதனைக்கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். குறிப்பாக குறைந்த கார்போஹைட்ரேட், சர்க்கரை இல்லாத உணவைச் சாப்பிடுவது மற்றும் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையில் நீரழிவு நோயாளிகள் நாவல் பழத்தை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் எனக்கூறப்படுகிறது. அப்படி என்ன நாவல் பழத்தில் உள்ளது? சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்க எந்தளவிற்கு உதவியாக உள்ளது? என இங்கே தெரிந்துக்கொள்வோம்.
நாவல் பழத்தில் ஆன்டி – ஆக்ஸிடன்ட் அதிகமாக நிறைந்திருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாக உள்ளது. இதோடு இந்த பழத்தில் குறைந்த அளவு கலோரியும், அதிகமான நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. எனவே இதனை உட்கொள்ளும் போது நீரழிவு நோயாளிக்கு மிகுந்த பலனளிப்பதாக உள்ளது.
இதுக்குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் நீரழிவு நோயாளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு துண்டு ரொட்டியுடன் கூடிய நாவல் பழங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 150 கிராம் நாவல் பழம் வழங்கப்பட்ட பின்னர், பங்கேற்பாளர்களுக்கு ஏழாவது நாளில் ரொட்டி மட்டும் வழங்கப்பட்டது.
இதற்குப் பிறகு, அவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. 15 நிமிடங்களுக்குள், ரொட்டியுடன் நாவல் பழம் சாப்பிட்ட நோயாளிகள் இரத்த சர்க்கரையில் குறைந்த கூர்முனைகளைக் கண்டனர். இதன் மூலம் நாவல் பழம் எளிய கார்போஹைட்ரேட்டுகளை உட்கொண்ட பிறகு இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இது நீரழிவ நோயாளிக்களுக்கு சிறந்த உணவாக கூறப்படுகிறது.
குறிப்பாக நாவல் மரத்தின் இலை,விதை, பட்டை மற்றும் பழம் என அனைத்திலும் மருத்துவக்குணங்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இப்பழத்தின் கொட்டையைக்கூட பொடியாக்கி சாப்பிட்டுவந்தால் நீரழிவு நோய் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது. இதோடு மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் இளமைத்தோற்றத்தை பாதுகாக்க விரும்புவோர்கள் நாவல் பழத்தினை அதிகம் சாப்பிடாலம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.