Chicken Nuggets | சுவையான, சத்தான சிக்கன் நகெட்ஸ் - சண்டே ஸ்பெஷல் ரெசிபி!
எளிமையாக செய்ய கூடிய சிக்கன் ரெசிபி இது. ஈவினிங் ஸ்னாக்ஸ் மற்றும், குழந்தைகள் விரும்பி செய்ய கூடிய உணவு இது. அனைவருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும்எளிமையாக செய்ய கூடிய சிக்கன் ரெசிபி இது.
எளிமையாக செய்ய கூடிய சிக்கன் ரெசிபி இது. ஈவினிங் ஸ்னாக்ஸ் மற்றும், குழந்தைகள் விரும்பி செய்ய கூடிய உணவு இது. அனைவருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும்.
தேவையான பொருள்கள்
சிக்கன் - 250 கிராம் ( சிறிதாக வெட்டி கொள்ளவும் )
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/4 கப்
முட்டை - 1
வெங்காயம் - 1
மிளகு - ¼ டீஸ்பூன்
நகெட்ஸ் மாவு - 1 ஸ்பூன்
பிரட்தூள்கள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஆவி பறக்க தோசை பார்த்திருப்பீங்க... இது அனல் பறக்க பறக்க நெருப்பு தோசை- வைரல் வீடியோ!
செய்முறை -
- சிக்கன் ஒரு மணி நேரம் மரைனேட் செய்யவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் , இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் மிளகு தூள், உப்பு அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
- இன்னொரு பாத்திரத்தில், முட்டையை உடைத்து, நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில், நாகெட்ஸ் பவுடர் வைத்து கொள்ளவும் இன்னொரு பாத்திரத்தில் பிரட்தூள்கள் வைத்து கொள்ளவும்.
- சிக்கன் எடுத்து சிறு உருண்டைகளாக மாற்றி, அதை நாககேட்ஸ் பவுடர் ஒரு முறை பிரட்டி, பின்னர், முட்டையில் ஒரு முறை நனைத்து, பின்னர் அதை பிரட்தூள்கள் நனைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி அதில் உருண்டைகளை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- அனைத்தையும் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- இதை சூடாக டொமட்டோ ஷாஸ் மற்றும் மயோனைஸ் உடன் ருசிக்கலாம்.
எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் செய்து சாப்பிட்டு அலுத்து போய் இருந்தால் இதை புதிதாக முயற்சி செய்யலாம். இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
சிக்கன் இது புரத சத்து மிக்கது. வெளியே சென்று ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதில், வீட்டில் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. கடைகளில் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணையை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் வீட்டில் செய்து சாப்பிடுவது, நல்லது. அதுவும் இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் வெளியில் சென்று சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டில் செய்து சாப்பிடுவது, உடலுக்கு நல்லது.
ஏற்கனவே சிக்கன் பற்றி பல கட்டுக்கதைகள் சுற்றி கொண்டும் இருக்கும் நேரத்தில், கடைகளில் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டாம். ஒரு நாளைக்கு தேவையான புரத சத்து, இதில் கிடைக்கும்
எப்பொழுதும் ஜிலுஜிலுனு ஏசி தானா? அப்போ நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு!