எப்பொழுதும் ஜிலுஜிலுனு ஏசி தானா? அப்போ நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு!
நீண்ட நேரம் ஏசி அறையில் இருப்பவராக இருந்தால், நிறைய தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், எத்தனை டிகிரியில் வைத்து இருப்பது உடலுக்கு நல்லது என தெரிந்து கொள்ள வேண்டும்.
நீண்ட நேரம் ஏசி அறையில் இருப்பவராக இருந்தால், நிறைய தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதை தடுக்கும் முறைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், எத்தனை டிகிரியில் வைத்து இருப்பது உடலுக்கு நல்லது என தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய சுற்றுசூழல் நிலையில், வெளியில் அதிகரிக்கும் வெப்பத்தின் காரணமாகவும், வீட்டிற்குள் இருக்கும் மின் விசிறி மட்டும் போதுமானதாக இல்லை. ஒரு விதமான வசதியின்மையை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் வேலை செய்ய ஏசி தேவைப்படுகிறது. உடல் வலி இல்லாமல், மிகவும் சௌகரியமாகவும் வேலை செய்ய, சோம்பல் இல்லாமல் வேலை செய்ய இதுவும் மிகவும் அவசியமாக இருக்கிறது. சிலர் 24 மணி நேரமும் ஏசி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடலுக்கு நிறைய பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. என்ன மாதிரியான பிரச்சனைகள் வருகிறது எனவும், அதற்கான தீர்வையும் தெரிந்து கொள்வோம்.
தோலில் வறட்சி ஏற்படும். நீண்ட நேரம் ஏசியில் இருப்பது உடலில் நீர் சத்தை குறைத்து விடும். இதனால் தோல் வறட்சி ஏற்படும். நீண்ட நேரம் ஏசி அறையில் இருப்பது தாகம் கூட எடுக்காது, தண்ணீர் குடிக்க கூட மறந்து விடுவோம். இதனால், தோல் வறட்சியாக காணப்படும். முகத்தில் கூட ஒரு புத்துணர்ச்சி இருக்காது. ஒரு விதமான சோர்வாக இருக்கும். இதை தவிர்க்க அலாரம் செட் செய்து வைத்து ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடிப்பது நல்லது. இது வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.
மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டையும், உடலில் பல்வேறு வலிகளையும் இது ஏற்படுத்தும். குறிப்பாக வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும். இது எலும்புகளில் சத்தை குறைத்து உடல் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டினால் வலிகளை ஏற்படுத்தும் மேலும் வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால் தோலில் இயற்கையாக இருக்கும் பொலிவு குறைந்து விடும். தோல் பொலிவு குறையும் போது, மிகவும் சோர்வாகவும், தேஜஸ் குறைந்து இருக்கும். இதை தவிர்க்க என்ன தான் ஏசி அறையில் வேலையாக இருந்தாலும், தினம் காலை அல்லது மாலை ஒரு 20- 30 நிமிடங்கள் வெயிலில் இருப்பது நல்லது. இது அன்றைய நாளைக்கு தேவையான வைட்டமின் டி சத்தை தரும்.
ஏசியில் இருக்க வேண்டும்.ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தால், ஒரு குறிப்பிட்ட டிகிரியில் இருப்பது நல்லது அதாவது 23- 27 டிகிரி அளவில் ஏசியை வைத்து கொள்வது நல்லது. அது மட்டுமில்லாமல், தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்வது, ஒரு நாளைக்கு தேவையான தண்ணீர் குடிப்பது , தினம் ஒரு 20- 30 நிமிடங்கள் வெயிலில் இருப்பது போன்றவற்றை செய்யலாம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிடைக்கும் சமயங்களில் எல்லாம் ஏசி அறையை விட்டு வெளியில் இருப்பது நல்லது. வெளியில் இயற்கையாக கிடைக்கும் காற்றை சுவாசிப்பது, தோலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.