Hormone Replacement Therapy: ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? ஆண், பெண் பாலினம் மாறுவது எப்படி? பக்கவிளைவுகள்
Hormone Replacement Therapy: ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Hormone Replacement Therapy: ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறுவது எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு:
அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், கடவுள் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 18 வயதுக்கு குறைவானோர்களுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனிமனித சுதந்திரத்தில் ட்ரம்ப் தலையிடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், இந்த பாலின மாற்று அறுவை சிகிச்சை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை:
பிறப்பால் ஆண் ஆக இருந்தவரை பெண்ணாகவும், பெண்ணாக இருந்தவரை ஆணாகவும் மாற்றுவது பாலின மறுசீரமைப்பு செயல்முறை எனப்படும். இந்த பாலின மறுசீரமைப்பு, ஹார்மோன் மாற்று (Hormone Replacement Therapy) அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது. இது பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறுகிறார்கள். இந்த அறுவை சிகிச்சை முறை என்ன? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? பக்க விளைவுகள் உண்டா? போன்ற விஷயங்கள் கீழே விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களுக்காக சிலர் தங்கள் பாலினத்தை மாற்ற விரும்புகிறார்கள். அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து, ஆண் ஆக இருந்தவர்கள் பெண்ணாகவும், பெண்ணாக இருந்தவர்கள் ஆணாகவும் மாறுகின்றனர். இந்த நேரத்தில், ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் பாலின மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த அறுவைசிகிச்சை நினைப்பது போல் எளிதானது அல்ல. செய்து முடிப்பதற்கு முன்னும், செய்து முடித்த பிறகும் சில விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது சில ஆபத்தான பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.
ஹார்மோன் மாற்று சிகிச்சை என்றல் என்ன?
குறிப்பாக, உடலில் வெளியாகும் சில ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணில் இருந்து பெண்ணாக மாறும், மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில் ஈஸ்ட்ரோஜன் மாற்றீடு அடங்கும். இது டெஸ்டோஸ்டிரோன் வெளியிடப்படுவதைத் தடுக்கிறது. இந்த டெஸ்டோஸ்டிரோன் தான் ஆண் பாலின பண்புகளின் வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் பிற உடல் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் ஆகும்.
பெண்ணிலிருந்து ஆணாக மாறும் முறையில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. எதிர்ப்பு ஈஸ்ட்ரோஜன்கள் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம், பெண் இனப்பெருக்க அமைப்பு, இரண்டாம் நிலை பாலின பண்புகளின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி தடுக்கப்படுகிறது
அறுவை சிகிச்சையின் வகைகள்:
ஹார்மோன் மாற்றுஅறுவை சிகிச்சையில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று ஆணிலிருந்து பெண்ணாக மாறுவது. இதன் ஒரு பகுதியாக, செயற்கை பிறப்புறுப்பு உருவாக்கப்படுகிறது. மார்பக பெருக்குதல் செய்யப்படுகிறது. பெண்களை போன்று முக அழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முடி மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை ஆணை முழுமையாக பெண்ணாக மாற்றுகிறது.
இரண்டாவது வகை பெண்ணிலிருந்து ஆணாக(Female-to-Male) மாறுவது. இந்த சிகிச்சை முறையில், ஃபாலோபிளாஸ்டி மூலம் செயற்கை ஆண்குறி உருவாக்கப்படுகிறது. மெட்டோடிபிளாஸ்டியும் சிகிச்சையின் ஒரு பகுதியாகும். மேலும், மார்பு மறுசீரமைப்பும் செய்யப்படுகிறது. கருப்பை அகற்றப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெண்கள் முற்றிலும் ஆணாக தோன்றுவார்கள்.
அறுவ சிகிச்சைக்கு முன்பு:
அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் மன வலிமை உள்ளவர்களா என்று முதலில் சோதிக்கப்படுவார்கள். அதை தொடர்ந்து ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை சுமார் ஒரு வருடம் நீடிக்கும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு :
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீண்ட காலம் மருத்துவமனையில் தங்குவதற்கு தயாராகுங்கள். வலியைத் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும். காயங்கள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். உடல் சிகிச்சை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும்.
பக்கவிளைவுகள்:
பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டால், சில ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள் உள்ளன. ரத்தப்போக்கு இருக்கும், நோய்த்தொற்றுகள் அதிகம். நரம்பு பிரச்னைகள் வரலாம். இந்த பிரச்சனைகளில் சில கவலையளிக்கக் கூடியதாகும். ஆனால் இந்த சிக்கல் எல்லாருக்கும் எழாது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு இயல்பு வாழ்கைக்கு திரும்ப மருத்துவர்கள் பரிந்துரைக்குல் கால அளவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சமூகத்தின் தாக்கம்:
இந்தியாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களில் பெரும்பாலானோர், ஒரு சராசரி மனிதனுக்கான இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத சூழலிலேயே உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான போதுமான விழிப்புணர்வு சமூகத்தில் இல்லாததே ஆகும். இதன் விளைவாகவே மூன்றாம் பாலினத்தவர் மிக மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, அவர்களை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள தொடங்கினால் மட்டுமே, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு இயல்பு வாழ்க்கைக்கான வாய்ப்பு கிடைக்கும். அரசும் இதற்கு போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டி உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )