மேலும் அறிய

தோசை மொறு மொறுன்னு வர்றதே இல்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..தேங்க்யூ சொல்வீங்க..

வீட்டில் இருக்கும் தோசைக்கல்லை வைத்தே ஹோட்டலில் செய்யும் மொறு மொறு மசால் தேவை செய்யும் முறைக் குறித்து இங்கே கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க…

வீட்டில் உள்ள  இரும்புச்சட்டியிலும் தோசை மொறு மொறுன்னு மற்றும் மிருதுவாக வர வேண்டும் என்றால் சில வழிமுறைகளை நாம் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

தென்னிந்திய உணவு பட்டியல்களில் முக்கிய இடம் வகிப்பது தோசை தான். “தோசையம்மா, தோசை இது அம்மா சுட்ட தோசை “என்று சிறுவயதில் இருந்தே அந்தப்பாடலைக் கேட்டதுனால தானோ இப்பவும் என்ன டிபன் வேண்டும் என்று கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  எனக்கு மொறு மொறு தோசைத் தான் வேணும்  என்பார்கள். ஆனால் என்ன?  பல வீடுகளில் இன்னமும் தோசை ஒழுங்காக சுட வருவதில்லை என்று தான் கூற வேண்டும். பல நேரங்களில் தோசைக்கல்லிருந்து தோசையை புரட்டிப்போடும் போது கிழித்துவிடும் அல்லது கருகிவிடும். இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு ஆசையாய் தோசை சுட்டுத்தரும் நம் அம்மாக்களைத் தான் பல நேரங்களில் நாம் திட்டித்தீர்த்திருப்போம்.  இனி அந்த கவலை யாருக்கும் வேண்டும். வீட்டில் இருக்கும் தோசைக்கல்லை வைத்தே ஹோட்டலில் செய்யும் மொறு மொறு மசால் தேவை செய்யும் முறைக் குறித்து இங்கே கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க…

தோசை மொறு மொறுன்னு வர்றதே இல்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..தேங்க்யூ சொல்வீங்க..

 நம் வீட்டிலேயே இரும்புச்சட்டியில் ஹோட்டல்களில் இருப்பது போல் மிருதுவான தோசை செய்யும் சில வழிமுறைகள்:

முதலில், வீட்டில் இருக்கும் இரும்புச்சட்டியில் நீங்கள் தோசை செய்ய விரும்பினால், முதலில் தோசை சட்டியை  எண்ணெய் அல்லது அழுக்கு போன்றவை எதுவும் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கேஸ் ஸ்டவ்வை சற்று குறைத்து வைத்துக்கொண்டு, தோசைக்கல்லை சூடாக்கி அதன் மீது 1 டீஸ்பூன் எண்ணெய் வைத்துக்கொள்ள வேண்டும்.  தோசைக்கல் நன்றாக சூடாக்கியதும் கேஸ் ஸ்டவ்வை அணைக்க வேண்டும். இப்படி மேற்கொள்ளும் போது  non-stick தோசை சுடுவதுப் போல இரும்புச்சட்டியிலும் தோசை நன்றாக செய்யலாம்.

தோசைக்கல்லை நன்றாக சூடாக்கி அதனை ஆற விடவேண்டும். பின்னர் தோசை செய்யும் போது கடாயில் எண்ணெய் தடவி மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும். இதனையடுத்து ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது ஈரமான துணியால் எண்ணெயைத் துடைத்து சுத்தம் செய்யவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதனை லேசாகத்துடைத்துவிட்டு தோசை செய்யலாம். இந்த வழிமுறையைப்பின்பற்றினால் மொறு மொறு தோசையை நாம் செய்ய முடியும்.

ஒரு வேளை வீட்டில் உள்ள இரும்புச்சட்டியில், தோசையைப் புரட்டுவதில் சிரமம் இருந்தால், தோசைக்கரண்டியை சிறிது தண்ணீரில் நனைத்து, தோசையைப் புரட்டிப்போடலாம். இவ்வாறு மேற்கொள்ளும் போது தோசை கிழியால் எளிதாகப்புரட்டிப்போட முடியும்.

தோசை மொறு மொறுன்னு வர்றதே இல்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..தேங்க்யூ சொல்வீங்க..

இதோடு பாதியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சிறிது தேய்த்து இரும்பு தோசைக்கல்லில் தேய்க்கலாம். இதனால் நீங்கள் செய்யும் தோசை மிகவும் மிருதுவாக உங்களுக்குக் கிடைக்கும். இதுப்போன்ற முறைகளைப்பின்பற்றினாலும் தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டிருந்தால், கடாயில் சிறிது மாவு எடுத்து நன்றாக சுத்தம் செய்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட முறைகளில் சற்று நாம் இரும்புச்சட்டியில் தோசை சுடும் போது பின்பற்றினாலே மிருதுவான மற்றும் மொறு மொறு தோசையை நாம் சாப்பிடலாம்..  ஒருவேளை நீங்கள் non stick தோசைக்கல்லில் சமைக்கிறோம் என்றால், கடாயை ஒரு முறை சூடாக்கவும். பின்னர் ஸ்டவ்வை அணைத்து சிறிது நேரம் தோசைக்கல்லை ஆற வைக்கவும். இதனையடுத்து தோசை சுடும் போது நமக்குப்பிடித்த மெல்லிய மற்றும் மிருதுவான தோசையை நாம் பெற முடியும்.

எனவே இனிமேல் வீட்டில் உள்ள இரும்புச்சட்டியில் தோசை சுட வருவதில்லை என கவலை வேண்டாம்…மேற்கண்ட முறைகளை சற்று நாமும் டிரை பண்ணிப்பார்ப்போமோ?.....

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget