Health Tips : ஆர்டரி நோயும், இதய நோய்களின் ஆபத்தையும் குறைக்கணுமா? இதையெல்லாம் செய்யுங்க..
ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி, புகையிலை பாவனை தவிர்ப்பு , போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் புற தமனி, இருதய நோயிலிருந்து விடுபடலாம்
புற தமனி நோய் பொதுவாக கால்களை பாதிக்கிறது , ஆனால் கைகள், கழுத்து அல்லது சிறுநீரகம் போன்ற பிற தமனிகளும் இதில் அடங்குகின்றன. நடைபயிற்சி போது கால் வலி, மற்ற அறிகுறிகளில் தோல் புண்கள் , நீல நிற தோல் , குளிர்ந்த தோல் அல்லது பாதிக்கப்பட்ட காலில் அசாதாரணமான நகங்கள் மற்றும் முடி வளர்ச்சி ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.
உலகில் மனிதர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிகளவு நாகரீக மாற்றத்தினால் இயற்கையை அதிகளவு தொலைத்துள்ளோம். நவீனத்துவம் நாகரீக மாற்றம் என்ற பெயரில் மனிதர்கள் இன்று தமது உடல் சமநிலையை தொலைத்து உள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.
மனிதர்களின் உடலுக்கு ஒவ்வாத கலப்படம் மிகுந்த செயற்கையான உணவுகளை உட்கொள்வதன் மூலம் நல் ஒரு வகையான நோய்களுக்கு முகம் கொடுக்கின்றனர். முன்னொரு காலத்தில் எல்லாம் ஒரு மனிதன் இயற்கையுடன் கலந்து இருந்ததான் ,அவனை சுற்றி ஆரோக்கியமும் அவர்கள் உண்ணும் உணவில் அதிக ஆரோக்கியமும் இருந்ததால் அவன் ஆயுள் காலமானது 90 முதல் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்தான்.
ஆனால் இப்பொழுது ஒரு மனிதனின் ஆயுட்காலம் 50 ஐ தாண்டுவதே அரிதாக உள்ளது. தற்போது நாம் உண்ணும் உணவானது இயற்கை போலவே செயற்கையாக தயாரிக்கப்படுவதால் நமது உடலில் அதிகளவு நோய்களை ஏற்படுத்துகிறது. இதில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துவது புற தமனி என்ற இதய நோய்களாகும். இந்த இதய நோய்களால் ஒரு ஆண்டில் சுமார் பல கோடி மரணங்கள் உலகலவில் நடக்கின்றது .
புற தமனி நோய் என்பது இதய நோய்களின் ஒருவகையாக உள்ளது. பொதுவாக பல்வேறு காரணிகள் புற தமனி நோயை நமக்கு ஏற்படுத்தும். இத்தகைய புறதமனி நோய் ஆனது, நமது உடம்பில் செல்லும் ரத்த ஓட்டத்தை பெருமளவு குறைப்பதாக உள்ளது.
பெரும்பாலும் புற தமனி நோயானது நமது மூட்டுகளில் உள்ள தமனிகளில் இடம்பெறக் கூடிய பிளேக் வைப்புகளால் ஏற்படக்கூடியது.
இது பெரும்பாலும் உடலில் வலி, அசௌகரியம், நிறமாற்றம், புண், விறைப்புத்தன்மை மற்றும் பிற பிரச்சனைகளை நமது உடலில் அதிகளவு ஏற்படுத்துகிறது.
புற தமனி நோயானது குணப்படுத்தவே முடியாத நோய் ஒன்றும் இல்லை. ஒரு சில முறையான நடைமுறைகள் மற்றும் காரணிகளைக் பின்பற்றுவதன் மூலம் இந்த நோயானது ஏற்படாமல் தவிர்க்கலாம் மற்றும் அதனை குணப்படுத்தலாம்.
நாம் தற்போது புற தமனி நோய்களை தவிர்க்கும் வழிமுறைகளை பார்ப்போம்.
புற தமனி நோய் அபாயத்தைக் குறைக்கும் தடுப்பு நடவடிக்கைகள்:
1. ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்:
நாம் உண்ணும் உணவே மருந்து என்ற முன்னோர்களின் கூற்றுப்படி நம் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் மட்டுமே நமது உடலானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மை.ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்பது நமது தமனிகள் மற்றும் நமது ஒட்டுமொத்த உடல்களின் சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. ஆரோக்கியமான உணவு உண்பதால் நமது உடம்பில் உள்ள தமனிகளில் கொழுப்பு சத்துக்கள் தங்காமல் சீராக பிரிந்து உறுப்புகளுக்கு சென்று வேலை செய்கிறது .இதனால் உடம்பில் அதிக அளவு ரத்த ஓட்டமானது சீராக பிரிந்து இயங்குகிறது.
2. புகையிலை தவிருங்கள்.
புகையிலை நமது உடம்பிற்கு பகை இல்லை, புகையிலை பயன்பாட்டினால் நமது உடம்பானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது .நாம் சில காலங்கள் புகையிலையை பயன்படுத்தி விட்டாலும் கூட அது நம் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகையிலை இதயத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.புகையிலை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. இது இதய நோய்க்கான முக்கிய காரணி ஆக அமைகிறது. புகையிலை பயன்பாட்டை நிறுத்துவதால் நமது உடலானது அதிக அளவில் பாதுகாக்கப்படும்.
3. சீரான உடற்பயிற்சி தேவை :
நமது உடலானது சீராகவும் ஆரோக்கியமாகவும் இயங்க வேண்டும் என்றால் உடற்பயிற்சியானது மிகவும் முக்கியம். உடற்பயிற்சியானது நாம் தொடர்ந்து செய்து வருவதால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் உடற்பயிற்சியினை விட்டு விட்டு செய்தால் அதற்கான பலனை முழுமையாக அனுபவிக்க முடியாது.தொடர்ந்து ஓய்வெடுக்காமல், உடல் சோர்ந்து நோயுற்றிருக்கும் ஏதாவது தருணங்களில் உடற்பயிற்சி செய்வது புற தமனி நோயை உண்டாக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது சீரான முறையில் உடற்பயிற்சிகளை செய்தால் அது அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவும். மேலும், தொடர்ந்து வேலை செய்வது நமது கை மற்றும் கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நமது உடம்புக்கு முறையான உடற்பயிற்சி இல்லாததால் புற தமனி நோய் ஏற்படுகிறது.
4. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க வேண்டும்;
இரத்த அழுத்தமானது பொதுவாக இதய நோய்க்கு முக்கிய பங்காற்றுகிறது. இரத்த அழுத்தமானது மிகுந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது, மற்றும் அதன் நிலைமையை மிகவும் மோசப்படுத்துகிறது. இதனை சரியான உடற்பயிற்சி மூலம் கண்ட்ரோல் செய்யலாம் .இதனை குணப்படுத்த தேவையான மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். இரத்த அழுத்தத்தை சரிசெய்ய இயற்கை முறையிலான உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். இந்த ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்தால் அதனை நிரந்தரமாக சரி செய்து விடலாம்.
5.கொழுப்பு அளவை சரிபார்க்கவும்:
நமது உடம்பில் அதிக அளவு கெட்ட கொழுப்பு சேர்வதாலே அதிக அளவு இதய பாதிப்பானது ஏற்படுகிறது. இந்தக் கொழுப்பானது அதிக அளவு சேர்வதால் ரத்த ஓட்டப் பாதையில் அடைப்பு போன்றவை ஏற்பட்டு இதய செயலிழப்புக்கு காரணமாக அமைகிறது. ஆகவே உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளை உட்கொள்வது அதைக் கட்டுப்படுத்த உதவும். அதிக அளவிலான காய்கறி வகைகளை எடுத்துக் கொள்ளும் போது இரத்த அழுத்தம் ,கொழுப்பு படிதல் போன்றவற்றை தவிர்க்கலாம்.
6. மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
மன அழுத்தம் மற்றும் பிற மனநிலைக் கோளாறுகள் ஒருவரின் இருதய ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். இதயம் தொடர்பான பிற நாள்பட்ட நோய்களுடன் சேர்ந்து புற தமனி நோய் அபாயத்தைக் குறைக்க விரும்பினால், உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் மற்றும் பிற செயல்பாடுகளை பயிற்சி செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் ,டென்ஷன் போன்றவற்றிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ளும்போது எவ்வகையான நோயும் நம்மை தாக்காது என்பதே உண்மை.
7. சுகாதாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
எப்பொழுதும் நமது சுற்றுப்புற சூழலையும் நம் உடலையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. நாம் சுகாதாரமற்று இருப்பதால்தான் இத்தகைய புறதமனி நோயானது அதிக அளவில் ஏற்படுகிறது. நாம் சுத்தமாக இருப்பதன் மூலம் இதனை எளிமையாக தவிர்க்க முடியும்.ஏனெனில் தற்போதைய காலகட்டத்தில் நோய்த்தொற்றுகள் கை கால்கள் வழியாக நோய்க்கிருமிகள் உடலில் நுழைய வாய்ப்பு இருக்கிறது .ஆகவே நாம் சுத்தமாக இருக்கும்போது நோய்க்கான காரணிகளை நாம் தவிர்க்கலாம்.
8.சரியான எடையை பராமரிக்கவும்
உடல் பருமன் என்பது புற தமனி நோய் மற்றும் பல்வேறு நாள்பட்ட இருதய நோய்களுக்கான மற்றொரு முக்கிய ஆபத்து காரணியாகும். உடல் எடையானது அதிகமாக இருப்பதால், அதிகளவு நோயானது கெட்ட கொழுப்புகளால் தேவையற்ற அதிகளவு சத்துக்களால் ஏற்படுகிறது. சரியான எடையை பராமரிப்பது உங்கள் இதய தமனிகளில் அடைப்பு உருவாகுவதைத் தவிர்க்க உதவும்.நமது வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.