மேலும் அறிய

`ஆமணக்கு எண்ணெய்’ எனப்படும் விளக்கெண்ணெய்யின் அற்புதம் நிறைந்த மருத்துவக் குணங்கள்

ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெயை, ஆங்கிலத்தில் `Castor Oil’ என்பார்கள். இது, மற்ற எண்ணெய்களைப் போல் அல்லாமல் அடர்த்தி அதிகமாகவும் பிசுபிசுப்புத் தன்மையுடனும் காணப்படும்.

ஏலேய் விளக்கெண்ணெய் என திட்டுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் `ஆமணக்கு எண்ணெய்’ எனப்படும் விளக்கெண்ணெய் மருத்துவக் குணங்கள் நிறைந்த அற்புதம். கோயில்களில் விளக்கேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முக்கியமானது ஆமணக்கு எண்ணெய்தான். 
 
மருத்துவக் குணம் நிறைந்த விளக்கெண்ணெய் தயாரிக்க மூல காரணமான ஆமணக்குச் செடி குறித்த செய்திகள் நிறைய இருக்கின்றன. 
 
குழந்தையின் அழுகையை நிறுத்துவதில் தொடங்கி, பல்வேறு நோய்களுக்கு மூலகாரணியாக இருக்கும் மலச்சிக்கல் வரை விளக்கெண்ணெய் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெயை, ஆங்கிலத்தில் `Castor Oil’ என்பார்கள். இது, மற்ற எண்ணெய்களைப் போல் அல்லாமல் அடர்த்தி அதிகமாகவும் பிசுபிசுப்புத் தன்மையுடனும் காணப்படும். தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் ஆமணக்குச் செடியை, `கொட்டை முத்துச் செடி’ என்றும் சொல்வார்கள். 
 
செயல்திறன் நிறைந்த ரசாயனப் பொருள்கள் உள்ள இதன் விதைகளில் நச்சுத்தன்மை உண்டு. ஆனால், விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்ட பிறகு அதில் நச்சுத்தன்மை இருக்காது.4,000 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கெண்ணெயின் மருத்துவக் குணங்களை அறிந்து பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
 
மலச்சிக்கல் தீர
 
குழந்தைகளை அடிக்கடி விளக்கெண்ணெய் குடிக்கவைத்து, மலத்தை வெளியேற்றவைத்து, வயிற்றை சுத்தமாக வைத்திருப்பார்கள். கிராமப்புறங்களில் இன்றைக்கும் விளக்கெண்ணெயைத்தான் பேதி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். காலையில் சூடான டீ அல்லது காபியில் விளக்கெண்ணெயைக் கலந்து குடித்தாலே மலம் இளகி தாராளமாக வெளியேறிவிடும். இரவில் நாட்டு வாழைப்பழம் அல்லது பேயன் பழத்தை விளக்கெண்ணெயில் நனைத்துச் சாப்பிட்டால், காலையில் தாராளமாக மலம் கழியும்.
 
`ஆமணக்கு எண்ணெய்’ எனப்படும் விளக்கெண்ணெய்யின் அற்புதம் நிறைந்த மருத்துவக் குணங்கள்
 
உடல்சூடு
 
சிறுவயதில் குழந்தைகள் காரணமின்றி அழுவார்கள். அதாவது, சூட்டால் ஏற்படும் வயிற்றுவலியால் அழுவார்கள். அப்போது தலை, தொப்புள், உள்ளங்கால் பகுதிகளில் விளக்கெண்ணெயை வைத்தால் குழந்தைகளின் அழுகை நிற்கும். கோழைக்கட்டு, இருமல் இருந்தால் இரண்டு பங்கு விளக்கெண்ணெயுடன் ஒரு பங்கு தேன் சேர்த்துக் கொடுத்தால் வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.
 
`ஆமணக்கு எண்ணெய்’ எனப்படும் விளக்கெண்ணெய்யின் அற்புதம் நிறைந்த மருத்துவக் குணங்கள்
 
 கண் பார்வை மற்றும் குளிர்ச்சி 
 
தொப்புள் பகுதியில் தினமும் எண்ணெய்விட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். 
இன்றைக்கு கம்ப்யூட்டர், மொபைல் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களை மணிக்கணக்கில் பயன்படுத்துவதால் பலருக்கு கண்களில் வறட்சி ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தொப்புளில் விளக்கெண்ணெய் விடுவது நல்ல பயன் தரும். விளக்கெண்ணெயை உட்கொள்வதால் மலச்சிக்கல் தீரும்.
 
வயிற்றுக் கோளாறுகள்
 
வயிறு தொடர்பான கோளாறுகள் நீங்கும், வாய்வுத்தொல்லை அகலும், வயிற்றுப் புண் நீங்கும், வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும், உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். விளக்கெண்ணெய் தேய்த்துக் குளித்தாலும் உடல் சூடு குறையும்.
 
அடர்த்தியான புருவம் மற்றும் கண் இமைகளுக்கு
 
புருவங்களிலும், இமைகளிலும் தினமும் இரவில் விளக்கெண்ணெயை தனியாகவோ அல்லது சிறிது கற்றாழை ஜெல்லுடன் கலந்து இரவில் போட்டுக்கொண்டால் நாளடைவில் புருவங்கள் மற்றும் இமை அடர்த்தி அதிகரிப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.
 
`ஆமணக்கு எண்ணெய்’ எனப்படும் விளக்கெண்ணெய்யின் அற்புதம் நிறைந்த மருத்துவக் குணங்கள்
 
பித்தவெடிப்பு
 
கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பைப் போக்க விளக்கெண்ணெயைச் சூடாக்கி, அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து தடவலாம்; சிலநாள்களில் சரியாகிவிடும்.
 
`ஆமணக்கு எண்ணெய்’ எனப்படும் விளக்கெண்ணெய்யின் அற்புதம் நிறைந்த மருத்துவக் குணங்கள்
 
மூக்கடைப்பு, சளித்தொல்லை
 
மூக்கடைப்பு, சளித்தொல்லை, தலைவலியால் அவதிப்படுபவர்கள் விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து, தீயில் எரித்து அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் பிரச்னை சரியாகும். 
 
தாய்ப்பால் சுரக்க
 
குழந்தை பெற்ற தாய்மார்களில் சிலருக்கு போதிய அளவு தாய்ப்பால் சுரக்காமலிருக்கும். அவர்கள் மார்பகங்களில் விளக்கெண்ணெயைத் தேய்த்துவிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.பாரம்பரிய மருத்துவங்கள் எப்போதுமே பிரசித்தி பெற்றவை தான்.நாமும் பயன்படுத்தி பலன் பெறுவோம்.

தலைப்பு செய்திகள்

திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget