மேலும் அறிய
Advertisement
Teenage Kids at Home உங்க டீன் ஏஜ் பிள்ளைகளை சமாளிப்பது எப்படின்னு தெரியலையா? இத முதல்ல படிச்சிடுங்க..
டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோருக்கு பின்வரும் ஆலோசனைகள் நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். இந்த 4 முக்கிய ஆலோசனைகளை பின்பற்றிப் பாருங்களேன்..
பிள்ளைகளுக்கு டீன் ஏஜ் (பதின்ம வயது) ஆரம்பித்துவிட்டால் பெற்றோர்களுக்கு கிலி பிடித்துவிடுகிறது. அதுவும் தொழில்நுட்ப கேட்ஜெட்கள் மலிந்த இந்த காலகட்டத்தில் டீன் ஏஜ் பிள்ளைகளை ஹேண்டில் செய்யும் பிரச்சினை இடியாப்பச் சிக்கலாக இருக்கிறது. டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோருக்கு பின்வரும் ஆலோசனைகள் நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். இந்த 4 முக்கிய ஆலோசனைகளை பின்பற்றிப் பாருங்களேன்..
1. அவர்களின் உணர்வுகளை மறைக்காமல் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கவும்
உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள். ஆகையால் ஏதாவது ஒரு சூழலை உருவாக்கி அவர்களுடன் நேரம் செலவழிக்கவும். அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாகத் தெரிவிக்க ஊக்குவிக்கவும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பள்ளியில் உங்களின் நாள் எப்படி இருந்தது என்று பேச்சைத் தொடங்கலாம். என்னால் நடந்தாலும் அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் புரியவையுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள். அதை அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். சில சாதாரண வார்த்தைகள் போதும் அவர்களின் நம்பிக்கையை வெல்ல. அவர்கள் எப்போது உங்களிடம் மனம் திறந்து பேசினாலும், நாங்கள் உன்னைப் புரிந்துகொள்கிறோம் என்ற சமிக்ஞையைக் கடத்திக் கொண்டே இருங்கள். அவர்கள் செய்யும் பல வேலைகள் பெற்றோர்களாக உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இருப்பினும் அவர்களின் நல்ல பழக்கங்களைப் பாராட்டிக் கொண்டிருங்கள் அதுவே தேவையற்றப் பழக்கத்திலிருந்து அவர்கள் விடுபட வழிவகுக்கும்.
2. அவர்களுக்காக நேரம் செலவிடுங்கள்..
புதிய நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை அவர்கள் பழகிக்கொள்ள வேண்டியா காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்து இருங்கள். வீட்டின் சிறு சிறு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள். டீன் ஏஜ் பருவம் என்றால் சுதந்திர தாகம் நிறைந்த பருவம். அதனால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்குங்கள். அவர்கள் அதை அனுபவிக்க பக்கதுணையாக இருங்கள். உங்களது டீன் ஏன் பிள்ளைகள் சலிப்புடன் சோர்வுடன் காணப்பட்டால் அவர்களுடன் கூடுதல் நேரம் செலவழித்து சில மூளைப்பயிற்சிகளை செய்ய வையுங்கள். எப்போதும் அவர்களுக்கு ஒரு பாஸ் போல் நடக்க முயற்சிக்காதீர்கள்.
3. பிரச்சனைகளின்போது இணைந்திருங்கள்..
உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் ஏதேனும் பிரச்சினைகளைக் கொண்டுவரும் போது அதற்கு சலனமில்லாமல் செவிகொடுங்கள். எல்லோருக்கும் வாழ்க்கையில் அழுத்தம் வரும். அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்ததையும் புரிந்து கொள்ளுங்கள். கோபமாக இருக்கும்போது எந்த ஒரு பிரச்சினையையும் பற்றி விவாதிக்காதீர்கள். நீங்களா? உங்கள் பிள்ளையா? என அதிகாரபலப் போட்டியில் ஈடுபடாதீர்கள். பெருந்தொற்று காலத்தில் டீன் ஏஜ் பருவத்தினர் பிடித்ததை செய்யமுடியாமல் கூடுதலாக அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். உங்களின் பிள்ளைகளிடம் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டவராக இருங்கள். உங்களின் கடினமான காலகட்டத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களின் பிள்ளைகளும் எதிர்காலத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். பிரச்சினை காலத்தில் இணைந்து தீர்வு காணுங்கள். அதிகம் பேசுங்கள்.
4. உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்..
கேர் கிவ்வர்கள் எப்போதும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி சற்று அதிகம். சுயம் பேணுதலும் அவசியம். நீங்கள் உங்களைப் பேணிக் கொள்ளும் பாங்கு உங்களின் டீன் ஏஜ் பிள்ளையை ஈர்க்கும். உங்களுக்கு எப்போதாவது அழுத்தம் ஏற்பட்டால் அடுத்தவர்களின் உதவியை நாடுங்கள். அதில் எந்தத் தவறில்லை. குடும்பத்தில் யாரேனும் ஒருநபரை நீங்கள் அவ்வாறான ஆன்ம நண்பராகத் தேர்வு செய்து கொள்ளலாம். சிலவேளைகளில் குடும்பத்துக்கு வெளியில் இருக்கும் நண்பர்களாகவும் இருக்கலாம். இவ்வாறாக செய்வதின் மூலம் நீங்கள் அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடற்பயிற்சி செய்யுங்கள். அலுவல்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்கள் மனதுக்கு நெருக்கமான விஷயங்களை அசைபோடுங்கள். இசை, கலை, நடனம், உடற்பயிற்சி, வாசிப்பு என்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
இந்த 4 ஆலோசனைகளை பின்பற்றி பாருங்களேன்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion