(Source: ECI/ABP News/ABP Majha)
Winter Fruits | மழைக்காலத்தில் இந்த 5 பழங்களும் முக்கியம்.. மிஸ் பண்ணாதீங்க..
மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் நிறைந்து இருக்கும். அதே நேரத்தில் பிரச்சனையும் நிறைந்து இருக்கும்.
மழை காலம் என்றாலே குழந்தைகளுக்கும், பல பெரியவர்களுக்கும் கொண்டாட்டம் நிறைந்து இருக்கும். அதே நேரத்தில் பிரச்சனையும் நிறைந்து இருக்கும். ஒவ்வாமை பிரச்சனைகள் மற்றும் தொற்று நோய்கள் அதிகம் பரவும். இந்த மழை நேரத்தில் உடல் ஆரோக்கியம் பாதுகாப்பாக வைப்பது அவசியம். உணவு, தண்ணீர், உடுத்தும் உடைகள் என அனைத்திலும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உணவே மருந்தாக எடுத்து கொள்ள வேண்டிய காலகட்டம்.
பொதுவாக மழை காலம் என்றாலே எந்த பழத்தையும் எடுத்துக்கொள்ள கூடாது. பழங்கள் சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற ஒரு கட்டுக்கதை நிலவி வருகிறது. அது உண்மை இல்லை. பழங்களில் அதிகளவு ஊட்டச்சத்துகள், விட்டமின்கள், நார்சத்து நிறைந்து இருக்கிறது. இதை அன்றாடம் எடுத்து கொள்ளும் போது தொற்று நோய்கள் அதிகம் பரவாமல் இருக்கும். குறிப்பாக இந்த 5 பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதனால் தொற்று நோய்கள் பரவுவது குறையும்.
- லிச்சி - பருவமழை காலங்களில் காற்றில் அதிகம் ஈரப்பதம் இருப்பதால், ஆஸ்துமா நோயாளிகள் மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படுவார்கள். இது மிகவும் கடினமானதாக இருக்கும். அவர்களுக்கு இந்த லிச்சி பழங்கள் சிறந்தது. இந்த பழத்தில் ஆக்ஸிடண்ட்களை அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின் சி சத்துகளும் நிறைந்து இருக்கிறது. மேலும் இது போன்ற பழங்களை எடுத்து கொள்ளும்போது உடல் எடையும் குறையும். பருவமழை நேரத்தில் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- நாவற்பழம் - இது இயற்கையிலேயே துவர்ப்பு சுவை உடையது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. குழந்தையாக இருக்கும் போது இதை கட்டாயம் சாப்பிட்டு பழகி இருப்போம். அனைத்து வயதினரும் இதை எடுத்து கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
- கொய்யாப்பழம் - பருவமழை காலத்தில் அதிகம் காய்க்கும் இந்த கொய்யாப்பழம் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி, இரும்பு, போலேட், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. இது ஒரு சீசனல் பழமாகும். அனைத்து வயதினரும் இதை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த கலோரி கொண்டுள்ளதால், உடல் எடை குறைக்க உதவும்.
- மாதுளை - மிக எளிதாக அனைவருக்கும் கிடைக்கும் இந்த பழம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நார்சத்து நிறைந்து இருப்பதால், இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து சிறந்த தீர்வாகும். மேலும் இது மழை காலத்தில் வரும் சளி,இருமல் ,காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.