முகப்பரு தொல்லையா..? ட்ரை ஸ்கினா..? இருக்கவே இருக்கு பேக்கிங் சோடா...பயன்படுத்துவது எப்படி?
எலுமிச்சை சாறுடன் கலந்த பேக்கிங் சோடா கலவை ப்ளீச்சிங் பண்புகளை அதிகரிக்கிறது.
உங்கள் வீட்டை துர்நாற்றம் இல்லாமல் வைத்திருக்க விரும்பினாலோ, வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க விரும்பினாலோ, பேக்கிங் செய்ய விரும்பினாலோ, சோடாத்தூள் தான் நமது முதல் சாய்ஸாக இருக்கும். ஆனால் பேக்கிங் சோடாவை சருமப் பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பேக்கிங் சோடா கொண்டு முகப்பருக்களை அகற்றும் டிஐஒய் வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அதோடு மட்டுமல்லாமல் சோடா சிறந்த எக்ஸ்போலியண்ட்டாகவும் பயன்படுகிறது.
பேக்கிங் சோடாவின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமம் வறண்டு போவதைத் தடுக்கவும், இருக்கும் முகப்பருவை குணப்படுத்தவும் மற்றும் சருமத்தில் வெடிப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது.
எலுமிச்சை சாறுடன் கலந்த பேக்கிங் சோடா கலவை ப்ளீச்சிங் பண்புகளை அதிகரிக்கிறது. எனவே, தழும்புகளை நீக்கம் செய்வதற்கும் காலப்போக்கில் அவை மறைவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இது இறந்த சரும செல்களை அகற்றுவதன் மூலம் தோல் அதன் உண்மை நிறத்தை அடைய உதவுகிறது.
பேக்கிங் சோடா ஒரு அஸ்ட்ரிஜென்ட் வகையைச் சேர்ந்தது மேலும் தோல் துளைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. இந்த சிகிச்சையானது உங்கள் துளைகளை சுத்தமாகவும் மூடியதாகவும் வைத்திருப்பதன் மூலம் முகப்பரு வளருவதைத் தடுக்கிறது.
பேக்கிங் சோடா எண்ணெய் சருமத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. இது ஈரப்பதத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தின் பசைத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது. சில நேரங்களில் பேக்கிங் சோடா முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் ஜாக்கிரதை! உங்களுக்கு சென்சிட்டிவ்வான சருமம் இருந்தால், உங்கள் முகத்தை ஸ்க்ரப் செய்ய பேக்கிங் சோடாவைப் பயன்படுத்த வேண்டாம்.
ஆரஞ்சு கலந்த பேக்கிங் சோடா அதன் குணப்படுத்தும் பண்புகளுடன் அதிசயங்களைச் செய்யலாம், உங்கள் சருமத்தின் கொலாஜன் அளவை அதிகரிக்கலாம் மற்றும் அசுத்தங்களை சுத்தம் செய்யலாம்.
இந்த கலவையானது பெரும்பாலான தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் தடிப்புகளைத் தடுக்கும். பேக்கிங் சோடாவுடன் தேங்காய் எண்ணெயை கலந்து சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும்.
பேக்கிங் சோடா முடியை அகற்றவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த கலவை மயிர்க்கால்களில் இருக்கும் ஈரத்தன்மையை அகற்றுகிறது, எனவே தேவையற்ற முடிகள் அதிக வலி இல்லாமல் எளிதாக அகற்ற இது உதவியாக இருக்கிறது.