சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானதா? தெரிஞ்சுக்கோங்க..
சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை இங்கே காணலாம்.
தோசை, பீட்ஸா, சூப் உள்ளிட்ட எந்த உணவு சாப்பிட்டாலும் ஒரு வேளையாவது சாதம் சாப்பிட வேண்டும் என்பது பெரும்பாலானோருக்கு தேர்வாக இருக்கும். பரபரப்பான வாழ்க்கை சூழலில் சமைத்த உணவுகள், உணவுக்கான முன் தயாரிப்புகள் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா என்பதற்கு நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளை காணலாம்.
வேக வைத்த சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா என்றால் அடிக்கடி இந்த முறையை பின்பற்றுவது நல்லதல்ல. சூடாக இருக்கும் சாதத்தை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. ஏர்-டைட் டப்பாவில் மட்டுமே ஸ்டோர் செய்யும் உணவை சூடு செய்து பயன்படுத்த வேண்டும். வேகவைத்த சாதத்தை 5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாக பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
தோசை, பீட்ஸா, சூப் உள்ளிட்ட எந்த உணவு சாப்பிட்டாலும் ஒரு வேளையாவது சாதம் சாப்பிட வேண்டும் என்பது பெரும்பாலானோருக்கு தேர்வாக இருக்கும். பரபரப்பான வாழ்க்கை சூழலில் சமைத்த உணவுகள், உணவுக்கான முன் தயாரிப்புகள் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா என்பதற்கு நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளை காணலாம்.
வேக வைத்த சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா என்றால் அடிக்கடி இந்த முறையை பின்பற்றுவது நல்லதல்ல. சூடாக இருக்கும் சாதத்தை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. ஏர்-டைட் டப்பாவில் மட்டுமே ஸ்டோர் செய்யும் உணவை சூடு செய்து பயன்படுத்த வேண்டும். வேகவைத்த சாதத்தை 5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாக ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் அதை பயன்படுத்திட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
சாதத்தை ஃபிரிட்ஜில் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை?
அரிசியில் Bacillus cereus என்ற பாக்டீரியா உள்ளது. வேக வைத்த சாதத்தை வெளியே வெகு நேரம் வைத்திருந்தாலே இது தன்னாலே வளர்ந்துவிடும். இதை சாப்பிட்டால் உடலுக்குப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.ஃபுட் பாய்சனிங் பாதிப்பு இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
பிரவுன் அரிசி, வெள்ளை அரிசி எதுவாக இருந்தாலும் அதை 24 மணிநேரத்திற்கு ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டும்.
அடிக்கடி சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த சாதத்தை சூடு செய்து மட்டுமே சாப்பிட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ஃபுட் பாய்சனிங், வாந்தி, வயிற்றுப் போக்கு, தலை சுற்றல், வயிற்று வலி, குடல் பாதைகளில் பிரச்சனை ஆகியவற்றை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால் சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். சாதம் மீதி இருந்தால் அதில் தண்ணீர் ஊற்றி பழைய சாதமாக உண்ணலாம். ஆனால், ஃபிரிட்ஜில் வைப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை.
24 மணி நேரத்திற்கு மேல் சாதத்தை ஃபிரிட்ஜில் வைப்பது ஆரோக்கியமானது அல்ல.