News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

White Sugar: வெள்ளைச் சர்க்கரையில் இவ்வளவு ரசாயனங்களா? பட்டியலை கேட்டா அதிர்ச்சியாகிடுவீங்க...!

White Sugar: சர்க்கரையில் அழுக்கு நீங்க பாஸ்ஃபோரிக் ஆஸிட், மண், சக்கை நீக்க பாலி எலக்ட்ரோலைட், சல்ஃபர் டை ஆக்ஸைடு, சுண்ணாம்புக் கலவை, கார்பன் டை ஆக்ஸைடு என இரசாயங்களின் பட்டியல் நீள்கிறது.

FOLLOW US: 
Share:

அறுசுவைகளில் இனிப்புச் சுவையை விரும்பாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அப்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் இனிப்பு வகை வெள்ளை நிறத்தில் இருக்கும் சர்க்கரை. ஆனால், இனிப்பாக இருக்கும் சர்க்கரையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதே கசப்பான உண்மை.

அளவுக்கு மீறி சர்க்கரை சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது என்று எச்சரிக்கிறது மருத்துவ உலகம். பெண்களை அதிகம் தாக்கும் ஆஸ்டியோபொராசிஸ், உடல் பருமன், இதய நோய், கண் பார்வைக் குறைபாடு, கீல்வாதம், பற்கள் பாதிப்பு இப்படி அச்சுறுத்தும் நோய்கள் ஏற்படும் அபாயாம் இருக்கிறது.

 நாம் உட்கொள்ளும் காய்கறிகள், பழங்களிலும் சர்க்கரை உண்டு. ஆனால் இனிப்பைத் தாண்டி இவற்றில் பல சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால் சர்க்கரையில் சத்துக்கள் ஏதும் இல்லாத இனிப்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

சர்க்கரை கரும்பில் இருந்துதானே தயாரிக்கப்படுகிறது. பிறகு ஏன் அது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்ற கேள்வி உங்களுக்கு எழும்? 

கரும்பிலிருந்து சர்க்கரையைப் பிரித்தெடுக்கும் வேலைகளைச் செய்யும் நிறுவனங்கள்,  கரும்பிலிருக்கும் ஒட்டு மொத்த சத்துகளையும் அழித்து சத்தில்லாத சர்க்கரையாகக் கொடுக்கிறது.

சர்க்கரையில் அழுக்கு நீங்க பாஸ்ஃபோரிக் ஆஸிட்.. மண், சக்கை நீக்க பாலி எலக்ட்ரோலைட், சல்ஃபர் டை ஆக்ஸைடு, சுண்ணாம்புக் கலவை, கார்பன் டை ஆக்ஸைடு என இரசாயங்களின் பட்டியல் நீள்கிறது. வெள்ளைச் சர்க்கரை, பிரவுன் சர்க்கரை, சுகர்ஃப்ரீ எல்லாம் ஒன்றுதான்!

சர்க்கரை தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து ஆறுமாத காலம் வரைதான் அது பயன்படுத்த ஏற்றவை. அதற்குமேல், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் சல்பர்-டை-ஆக்ஸைடு வீரிய மிக்க நஞ்சாக மாறிவிடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ கூட உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியதுதான். தொடர்சியாக இதைப் பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் அபாயமுண்டு என்கிறார்கள். நம் பண்பாட்டில் இனிப்பு சாப்பிடும் முறை இருந்திருக்கிறது. ஆனால், அவர்கள் பயன்படுத்தியது தேன், வெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை.  

சக்கரை பயன்படுத்துவதை தவிர்ப்பது என்பது சற்று கடினம்தான். ஆனால் அதில் எந்த சத்துக்களும் இல்லை என்பதை நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சம் வெள்ளைச் சர்க்கரைக்கு குட் பை சொல்லுங்கள். ஆரோக்கியமான உடலுக்கு ஹலோ சொல்லுங்கள். சர்க்கரையை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள். சத்துக்கள் அதிகம் உள்ள இயற்கையான இனிப்புகளை அதிகம் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே சர்க்கரை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

ஆரோக்கியம் அதிகம் உள்ள நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, பனை வெல்லம், ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Also Read: Maha Shivaratri 2022: மகாசிவராத்திரி விரதமுறைகள் தெரியுமா? விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு...

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Published at : 28 Feb 2022 02:23 PM (IST) Tags: Health sugar unhealthy food Say No to Sugar

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு

Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு

Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்கள் பொறுப்பீர்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!

Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்கள் பொறுப்பீர்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!

ZIM vs IND T20: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி..டாஸ் வென்ற இந்தியா! பந்து வீச்சு தேர்வு!

ZIM vs IND T20: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி..டாஸ் வென்ற இந்தியா! பந்து வீச்சு தேர்வு!