கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களா நீங்கள்? உங்களுக்குதான் இந்த டிப்ஸ்..!
மஞ்சளில் இருக்கும் வீக்கத்திற்கு எதிராக செயல்படும் திறன் உடற்பயிற்சியின் பின்னான நமது தசைகளை மீட்டெடுக்கும். மேலும், பாலின் மூலமாக நமக்கு கால்சியம் கிடைக்கும்.
உடற்பயிற்சியின் பின் குடிப்பதற்கு என்ன எடுத்து செல்லலாம்? உடற்பயிற்சியின் பின்பான பானங்கள் முக்கியம். உடலின் தசைகளில் தேங்கியிருக்கும் லாக்டிக் ஆசிடை சீரமைக்க, இழந்த ஆற்றலை ஈடுகட்ட இந்த பானங்கள் தேவை.
- சாக்லேட் பீனட் பட்டர் புரதக் கலவை
சாக்லேட், லாக்டிக் ஆசிட் உருவாக்கத்தால் தசைகளில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தை சரி செய்யும். பீனட் பட்டரில் புரதம் கிடைக்கிறது. மேலும், இவை இரண்டும் மிகவும் சுவையானதும் கூட.
- மஞ்சள் பால்
மஞ்சளில் இருக்கும் வீக்கத்திற்கு எதிராக செயல்படும் திறன் உடற்பயிற்சியின் பின்னான நமது தசைகளை மீட்டெடுக்கும். மேலும், பாலின் மூலமாக நமக்கு கால்சியம் கிடைக்கும். தேவைபட்டால், பாலிற்கு பதிலாக தேங்காய்ப் பாலைப் பயன்படுத்தலாம்.
- இளநீர்
இளநீரில் இருந்து கிடைக்கும் எலெக்ட்ரோலைட்ஸ் இதை உடற்பயிற்சியின் பின் பருகுவதற்கு சிறப்பான பானம் ஆக்குகிறது. இழந்த நீர்ச் சத்தை ஈடுகட்டவும், பிஅச் அளவுகளை சரிகட்டவும் இது உதவி செய்யும்.
- செர்ரி ஜூஸ்
இது சாக்லேட் தரும் அதே பயன்களைக் கொண்டிருக்கிறது. தசைகளின் சோர்வைப் போக்குவதோடு, தசைகள் மறுகட்டமைப்பு செய்வதற்கும் இது உதவுகிறது. செர்ரி சுவை ஒத்துக்கொள்ளாவிட்டால் செர்ரிக்குப் பதிலாக ஏதேனும் பெர்ரி பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
- பிளாக் அல்லது கிரீன் தேநீர்
தசைகளின் சோர்வு மற்றும் மறுகட்டமைப்பில் இது பேருதவி புரிகிறது. மேலும், இது கலோரிகளையும் எரிக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால், இதைப் பயன்படுத்தும்போது நீங்கள் திட்டமிட்டதை விட அதிக அளவு கலோரிகள் எரிந்திருப்பதைப் பார்ப்பீர்கள்.
இவை மட்டுமல்லாது, காலிஃபிளவர், கீரைகள், பாதாம், மற்ற பருப்புகளைக் கொண்டு செய்யும் ஸ்மூத்திகள் உடற்பயிற்சிக்குப் பின்பான சிறந்த பானங்கள். இவற்றுடன் சாக்லேட், பீனட் பட்டர் கலந்து எடுத்துக்கொள்ளும்போது சுவையுடன் தேவையான சத்துகளும் கிடைக்கும்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்