Ven Pongal: வெண் பொங்கல் இந்த மாதிரி செய்து பாருங்க! சுவை அசத்தலா இருக்கும்!
வெண் பொங்கல் எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
பொங்கல் நம் வீட்டில் செய்வதை காட்டிலும் ஹோட்டலில் சுவையாக இருப்பதாய் உணர்வோம். அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பொருட்களும், செய்முறையும் தான். தற்போது நம் வீட்டிலேயே அசத்தல் சுவையில் வெண்பொங்கல் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – ½ கப்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி- 1 துண்டு
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2-3
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – சிறிதளவு
செய்முறை
முதலில் அரிசி மற்றும் பருப்பை மிதமான சூட்டில் 2 நிமிடம் வறுத்து எடுத்து, பின்பு அதில் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் சேர்த்து, பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
இப்போது அதில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சரியாக 5 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
குக்கரில் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது பொங்கல் நன்கு குழைந்து வெந்து வரும்
அடுத்து, அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சிறிதளவு முந்திரி சேர்த்து வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான வெண்பொங்கல் தயார். இதை சாம்பருடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க