Banana Barfi : மிருதுவான வாழைப்பழ பர்ஃபி.. இப்படி செய்து அசத்துங்க!
Banana Barfi :வாழைப்பழ பர்ஃபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 3
வெல்லம் - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
நெய் - அரை கப்
ரவை - கால் கப்
ஏலக்காய் தூள் - இரண்டு சிட்டிகை
குங்குமப்பூ உணவு நிறமி - ஒரு சிட்டிகை
பாதம், பிஸ்தா - நறுக்கியது சிறிதளவு
செய்முறை
மூன்று வாழைப்பழத்தை நறுக்கி தோலுரித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் உருகும் வரை காய்ச்ச வேண்டும். இதை எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை கப் நெய் சேர்த்து சூடானதும், அதில் அரை கப் கோதுமை மாவு சேர்த்து மாவும் நெய்யும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் வரை கிளறி விட வேண்டும். பின் இதனுடன் கால் கப் ரவை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள வாழைப்பழ கலவையை இதனுடன் சேர்த்து கரண்டியால் நன்கு கலந்து விட வேண்டும். இவை கோதுமை மாவுடன் நன்கு கலந்ததும் இதில் தயாரித்து வைத்துள்ள வெல்ல பாகை சேர்க்க வேண்டும். குங்குமப்பூ உணவு நிறமி ஒரு இனுக்கு சேர்க்கவும்.
இதை நன்றாக கலந்து விட்டு, இரண்டு சிட்டிகை ஏலக்காய் பவுடர், நறுக்கிய பாதாம் பிஸ்தா பருப்புகளை சேர்க்கவும். இதை நன்றாக கரண்டியால் கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளவும்.
இப்போது ஒரு சிறிய ட்ரேவில் பட்டர் தடவி அதன் மீது இந்த கலவையை கொட்டி பரப்பி சமப்படுத்தி விடவும். இதன் மீது நறுக்கிய பாதாம் பருப்பு தூவி, பருப்புகள் கலவையில் புதையும் வகையில் கரண்டியால் லேசாக அழுத்திவிடவும்.
இதை இரண்டு மணிநேரத்திற்கு பிறகு வேண்டிய வடிவில் வெட்டி பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இந்த பர்ஃபி நல்ல மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
மேலும் படிக்க
Sago Milk Pudding : வெயிலுக்கு இதமா ஜவ்வரிசி பால் புட்டிங்.. எளிமையான செய்முறை இதோ!
Onion Mango Thokku: காரசாரமான வெங்காய மாங்காய் தொக்கு! நாக்கில் எச்சில் ஊறும் - எப்படி செய்வது?