(Source: ECI/ABP News/ABP Majha)
Kiwi : கிவி பழத்தை சாப்பிடுவதை தவிர்க்காதீங்க.. இதனால் இத்தனை நன்மைகளா? இதுவரைக்கும் இது தெரியாதே..
டெங்குக்கு ஆகச்சிறந்த மருந்து பொருளாக இந்த கிவி பழம் விளஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.ங்குவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன
கிவி பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து காணப்படுகிறது. விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பழத்தின் சிறிய கருப்பு விதைகள் மற்றும் சதை பகுதியை உண்ணலாம். சில பழங்கள் ஆண்டின் சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும் ஆனால் இந்த பழத்தை ஆண்டு முழுவதும் வாங்கி சாப்பிடலாம்.
கலிஃபோர்னியா மற்றும் நியூசிலாந்தில் அதிக அளவில் பயிரிடப்படும் இந்த பழம் சற்று ஏறக்குறைய 50 வகைகளில் கிடைக்கிறது.
டெங்குவுக்கு ஆகச்சிறந்த மருந்து பொருளாக இந்த கிவி பழம் விளங்குவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.டெங்கு என்பது பெண் ஏடிஸ் கொசுவால் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இவ்வகை கொசுக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை கடித்ததன் பின், பாதிப்பில்லாமல் இருக்கும் ஒருவரை கடிக்கும் போது, இந்த நோய் பரவுகிறது.டெங்கு உடலை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், பிளேட் செல் இழப்பு,மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் டெங்கு ஷாக் சிண்ட்ரோம் போன்ற கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. யாராவது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், நீண்ட காலத்திற்கு, சத்தான உணவை உட்கொள்வது அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் என பல ஆரோக்கிய தரும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த கிவி பழமானது, விட்டமின் சி மற்றும் நிறைய நார்ச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இது ரத்த செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
கிவி பழம் உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. இது இரத்தம் உறைவதை தடுக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே இந்த பழம் ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்கள்,ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று கிவி பழங்களை சாப்பிடுவது, இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து,இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கிவியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கல் மற்றும் பல்வேறு குடல் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் செரிமானத்தில் ஏற்படும் அசௌகரியங்களை குறைக்க உதவுகிறது. கிவியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இவை கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. பார்வைத் திறனை அதிகரிக்கின்றன.
புற்றுநோய் வராமல் தடுக்கவும் இந்த பழம் பெரும் பங்கு வகிக்கிறது.கிவி சாப்பிடுவதால், சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அல்சர் போன்ற நோய்களை நீக்குவதில் கிவி மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை பயக்கும். கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் ,கிவி பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதினால் ஏற்படும் ஆஸ்துமா, மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு, சிறந்த தீர்வாக இருக்கிறது.
அதிக வைட்டமின் சி கிவி பழத்தில் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள கிவி, ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆகவே நீங்கள் கடைக்குப் போகும் சமயங்களில் எல்லாம்,உங்களுக்கும் உங்கள் வீடுகளில் உள்ளவர்களுக்குமாக சேர்த்து,வாரம் ஒருமுறையேனும் பழங்களை வாங்கி வந்து உண்ணுங்கள்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )