மேலும் அறிய
Advertisement
Plantain Flower Biryani:ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பூவில் சுவையான பிரியாணி... செய்முறை இதோ...
சுவையான வாழைப்பூ பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 வாழைப்பூ, 1 1/2 கப் பாசுமதி அரிசி, 2 பெரிய வெங்காயம், 1 தக்காளி, 1டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள், 1டீஸ்பூன் பிரியாணி மசாலா தூள்.
அரைக்க
10 சாம்பார் வெங்காயம், 7 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, 4 ஏலக்காய், கொத்தமல்லி இலை, புதினா இலை, உப்பு-தேவையான அளவு , 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு.
தாளிக்க
4டேபிள் ஸ்பூன் நெய், 2டேபிள் ஸ்பூன் எண்ணெய், ஒரு சிறிய துண்டு பட்டை, 2 கிராம்பு
செய்முறை
பாசுமதி அரிசியை நன்கு கழுவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம்,பூண்டு,பட்டை, கிராம்பு, ஏலக்காய் இஞ்சி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய் மல்லி,புதினா ஆகியவற்றை நறுக்கி தயாராக எடுத்து வைக்க வேண்டும்
அடி கனமான பாத்திரத்தை கேஸ் ஸ்டவ்வில் வைத்து, எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும்,பட்டை,கிராம்பு, ஏலக்காய்,நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி உள்ளிட்டவை சேர்த்து அரைத்த விழுது சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பின்பு மிளகாய் தூள்,பிரியாணி மசாலா தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.அத்துடன் தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி விட வேண்டும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion