Moong Dal Nuggets:மாலை நேர ஸ்நாக்சிற்கு ஏற்ற ரெசிபி? சுவையான நக்கட்ஸ் செய்வது எப்படி?
மாலை நேரத்தில் சுவைக்க டேஸ்டியான நக்கட்ஸ்களை வீட்டிலே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
மாலை நேரத்தில் சுவையான வித்தியாசமான ஒரு ஸ்நாக்ஸ்சை சுவைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாசி பருப்பு நக்கட்ஸ்களை நீங்கள் ட்ரை பண்ணலாம். இந்த நக்கட்ஸ்கள் க்ரிஸ்பியாக சுவையாக இருக்கும். இது பாசி பருப்பு, கேரட், வெங்காயம், மசாலா ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இது எளிமையாக மற்றும் குறைவான பொருட்களை கொண்டு குறைந்த நேரத்தில் தயாரிக்கக் கூடியது. இந்த நக்கட்ஸ்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க சுவையான நக்கட்ஸ்களை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1/2 கப் மஞ்சள் பாசி பருப்பு, 1/2 கப் பச்சை பாசி பருப்பு, உப்பு- சுவைக்கேற்ப, பாதி வெங்காயம் பொடியாக நறுக்கியது, 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது, 1/4 கப் கேரட் பொடியாக நறுக்கியது, 6-7 கறிவேப்பிலை இலைகள், 1 கப் ரொட்டி துண்டுகள், 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு, 1/2 தேக்கரண்டி சாட் மசாலா, 1/2 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார், 2 தேக்கரண்டி எண்ணெய்.
செய்முறை
1.இரண்டு பருப்புகளையும் ஒன்றாகக் கலந்து, கழுவி, 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அரை வேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பருப்பை ஆறவைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பை எடுத்து, இப்போது அதில் பொடியாக நறுக்கிய காய்கறிகள், மசாலா, பிரட் துண்டுகள் மற்றும் கார்ன்ஃப்ளார் சேர்த்து மாவை பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.தயாரிக்கப்பட்ட கலவையிலிருந்து சிறிய நக்கட்ஸ்களை உருவாக்க வேண்டும். ஏர் பிரையரை (air fryer ) 180 டிகிரிக்கு முன்கூட்டியே சூடாக்க வேண்டும். அனைத்து நக்கட்ஸ்களையும் வேக வைப்பதற்கான கூடையில் வைத்து, ப்ரெஷ் கொண்டு எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வேக( bake) வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது மிருதுவான பொன்னிறமாக மாறும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
5.வேண்டுமானால் நக்கட்ஸ்களை எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். இப்போது சுவையான நக்கட்ஸ்கள் தயார். இதை அப்படியே சாப்பிடலாம். தக்காளி சாஸ் உடன் வைத்து சாப்பிட்டால் மேலும் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க,
MS Dhoni: அடுத்த ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? உடற்தகுதி குறித்து அவரே தந்த அப்டேட்!