News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

முழுக்க முழுக்க முந்திரி: பாயாசம் இல்ல புது கிரேவி! - செய்வது எப்படி?

முந்திரியை  முக்கிய மூலப்பொருளாக கொண்ட ஒரு உணவை நாம் அரிதாகவே பார்த்திருக்கிறோம்.

FOLLOW US: 
Share:

முந்திரி ஒரு உலர் பழமாகும், இது இந்திய சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. சில ரெசிபிகளுக்கு முந்திரி பேஸ்ட்டை கிரீமியாகவோ அல்லது சுவையாகவோ இது சேர்க்கப்படுகிறது, மற்ற ரெசிபிகள் தயாரிக்கப்பட்ட பிறகு இறுதியில் அதனைக் கட்டியாக்க இவை பயன்படுத்துகின்றன. ஆனால் முந்திரியை  முக்கிய மூலப்பொருளாக கொண்ட ஒரு உணவை நாம் அரிதாகவே பார்த்திருக்கிறோம். முந்திரியில் இருந்து டிஷ் செய்து அதற்குத் தகுந்த கவனத்தை ஏன் கொடுக்கக்கூடாது?! சுவையான காஜூ மசாலா கிரேவி தெரியுமா? வறுத்த முந்திரியை தக்காளி மற்றும் முந்திரி ஆகியவற்றால் செய்யப்பட்ட கிரீமி மற்றும் டேங்கியான கிரேவியில் சேர்த்து இந்த மசாலா குழம்பு தயார் செய்யப்படுகிறது. நலிந்தவர்களுக்கான ஆடம்பரமான உணவுக்கான ஒரு தேர்வாக இந்த காஜூ மசாலா கிரேவி இருக்கிறது.

View this post on Instagram
 
A post shared by Food Love By Saranya (@food_love_by_saranya)

காஜு மசாலா தாபாக்களில் மிகவும் பிரபலமான ஒரு கிரேவியாகும். தந்தூரி நான் அல்லது பட்டர் குல்ச்சாவுடன் அடிக்கடி பரிமாறப்படும், இந்த மசால் மற்றும் கிரீமி கிரேவி சாப்பிடும்போதே வாயில் கரையும். உங்களுக்கு தேவையானது முந்திரி பருப்புகள், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் அடிப்படை மசாலாக் கலவை. இவை இருந்தால் இந்த கிரீம் கிரேவியை வீட்டிலேயே செய்யலாம்.

முதலில், நீங்கள் பொருட்களை தயார் செய்ய வேண்டும். ஒரு கப் முந்திரியை வெண்ணெயில் பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக வைக்கவும். பே லீஃப் மற்றும் தக்காளியை வெண்ணெயில் வறுக்கவும். தக்காளி கூழ் ஆனதும், பே லீஃபை அகற்றிவிட்டு, தக்காளியை ப்யூரியாக அரைக்கவும். 18-20 முந்திரியை பொடியாக அரைக்கவும்.
அடுத்து இஞ்சி-பூண்டு விழுதை வெண்ணெயில் வாசனை போகும் வரை வதக்கவும். முந்திரி தூள் சேர்த்து பொடி பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தக்காளி கூழ், மிளகாய் தூள், தண்ணீர் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். கறியை சிறிது நேரம் வேக விடவும். வறுத்த முந்திரி சேர்த்து உப்பு சேர்த்து தாளிக்கவும். கரம் மசாலா, கிரீம் மற்றும் நொறுக்கப்பட்ட கசூரி மேத்தி சேர்த்து கிரேவியை முடிக்கவும். காஜு மசாலா கறி தயார்!

Published at : 02 Aug 2022 06:38 AM (IST) Tags: cashew Curry Kaju masala Indian recipe Masala recipe Indian cuisine

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!