Good Friday 2023: புனித வெள்ளியன்று மீன் சாப்பிடும் பழக்கம் எங்கிருந்து வந்துச்சு தெரியுமா? இந்தாங்க மீன் ரெசிப்பிகள்..
புனித வெள்ளி 2023: மீன் கடலில் இருந்து வருகிறது என்பதாலும், சூடான இரத்தம் கொண்ட விலங்குகளின் இறைச்சி இல்லை என்பதாலும், புனித வெள்ளி அன்று உட்கொள்வது நீண்டகால கிறிஸ்தவ பாரம்பரியமாக மாறி உள்ளது.
புனித வெள்ளி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். மத நம்பிக்கையின்படி, புனித வெள்ளி மனிதகுலத்திற்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தின் நாளாக அறியப்படுகிறது. அவர் செய்த தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், துக்கம் அனுசரிக்கும் விதமாகவும், பல கிறிஸ்தவர்கள் இந்த 40 நாட்களில் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். இந்த நாளில், சிலர் உண்ணாவிரதம் இருந்து, மீன், பால் மற்றும் தானியங்களுடன் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் அதை முடிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் இந்த நாளில் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்கும் அதே வேளையில், மீன் சாப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் அது கடலில் இருந்து வருகிறது என்பதாலும், சூடான இரத்தம் கொண்ட விலங்குகளின் இறைச்சி இல்லை என்பதாலும், புனித வெள்ளி அன்று மீன் சாப்பிடுவது என்பது ஒரு நீண்டகால கிறிஸ்தவ பாரம்பரியமாக மாறி உள்ளது.
புனித வெள்ளி அன்று மீன் சாப்பிடுவது ஏன்?
மிடில் ஏஜ் எனப்படும் இடைக்காலத்தில், கிறிஸ்தவ தேவாலயங்கள் வெள்ளிக்கிழமைகளில் சூடான இரத்தம் கொண்ட விலங்கு இறைச்சியை உட்கொள்வதைத் தடைசெய்தது. அதற்கு மாற்றாக மீன் பிரபலமடைய வழிவகுத்தது. ஆரம்பகால கிறிஸ்தவத்தில், மீன்கள் கடவுளை நம்புபவர்களின் அடையாளமாக இருந்தது. கூடுதலாக, புனித வெள்ளியில் இறைச்சிக்கு மாற்றாக மீன் கருதப்படுகிறது. மேலும் கடவுளின் புதல்வனாக கருதப்படும் இயேசுவின் வாழ்க்கைக் கதைகளில் அடிக்கடி மீன் குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமின்றி இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் பலர் மீனவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புனித வெள்ளி அன்று இரவு உணவிற்கான சுவையாக மீன் சமைத்து சாப்பிட டிப்ஸ்:
மீன் மற்றும் சிப்ஸ்
ஃபிரெஞ்சு பாரம்பரியமான மீன் மற்றும் சிப்ஸ் ஃபார்முலாவில் மீனை மொறுமொறுவென வறுத்து சாப்பிடுவது வழக்கமாகும். பீர் மாவு எனப்படும் பிரத்யேக மாவில் மீனை டிப் செய்து மொறுமொறுப்பாக வறுத்து சாப்பிடலாம். இதோடு எண்ணையில் வறுத்த சிப்ஸ் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கிரில்டு மீன் மற்றும் சிப்ஸ்
ஆரோக்கியமான வழியாக, எண்ணையில் மீனை வறுப்பதற்குப் பதிலாக எண்ணெய் இல்லாமல் கிரில் செய்து சாப்பிடலாம். மீனை உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அது வேகும் வரை கிரில் செய்ய வேண்டும். அதே போல் அடுப்பில் சுடப்பட்ட சிப்ஸ்-உடன் பரிமாற வேண்டும்.
சிப்ஸுடன் மீன் டாகோஸ்
மெக்சிகன் ஃபிளேவரில் மீன் சாப்பிட விரும்புவோர் இது போல சாப்பிடலாம். சிப்ஸுடன் சேர்த்துமீன் டகோஸை உருவாக்கவும். மீனை வறுத்து, அதன்மேல் நறுக்கிய கீரை, வெட்டிய தக்காளி ஆகியவற்றை மழைச்சாரல் போல தூவி, மேலே காரமான மெக்சிகன் மயோனஸை பரப்பி, மிருதுவான சிப்ஸுடன் பரிமாறவும்.
மீன் மற்றும் சிப்ஸ் கலவை
கறி சாஸ் சேர்த்து மீன் மற்றும் சிப்ஸ் செய்து சாப்பிடுவதை பலர் விரும்புகின்றனர். வழக்கம் போல் மீனை தயார் செய்து, ஒரு பக்கம் சிப்ஸ் மற்றும் கறி சாஸ் தாராளமாக பரிமாறவும். மீன்களை வறுப்பதற்குப் பதிலாக கிரில் செய்தல் சிறந்தது. உங்களுக்கு பிடித்த மசாலாப் பொருட்களுடன் மீனை சுட்டு சாப்பிடலாம்.
மீன் மற்றும் சிப்ஸ் பை
மீன் மற்றும் சிப்ஸ் பை தயாரிப்பதன் மூலம் இரண்டு பிரிட்டிஷ் கிளாசிக்ஸை இணைக்கும் அனுபவம் கிடைக்கிறது. வழக்கம் போல் மீன் மற்றும் சிப்ஸ் தயாரிப்பது போல தொடங்கி, பின்னர் பிசைந்த உருளைக்கிழங்கு மற்றும் கிரீமி சாஸுடன் ஒரு பேக்கிங் பாத்திரத்தில் அடுக்கி, பொன்னிறமாக பேக் செய்து சூடாக பரிமாறவும்.
மீன் மற்றும் சிப்ஸ் பர்கர்
எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் இருந்தால், இந்த மீனையும் சிப்சையும் பர்கராக செய்து சாப்பிடலாம். மீனை கிரில் செய்தோ, வறுத்தோ வைத்துக்கொண்டு, பின்னர் கீரை, தக்காளி மற்றும் டால்டர் சாஸ் ஆகியவற்றை அடுக்கிய பர்கர் பன் மீது வைத்து மேலே ஒரு பன்னை வைத்து மூடி சிப்ஸ் உடன் சேர்த்து உண்ணலாம்.